Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2020 18:00:49 Hours

மேலும் 410 கடற்படையினர் வைத்தியசாலையில்

ஹோட்டல் புளூ வோட்டர்ஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் செயல்முறை நிறைவடைந்த 17 பேர் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று (04) தனிமைப்படுத்தல் சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இன்று (04) ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வரை (04) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 11,686 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர். 04 ஆம் திகதி ஜூன் 0500 மணி வரை மேலும் 41 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய நாட்டைச் சேர்ந்த 03 பேரும், பங்களாதேஷசை சேர்ந்த ஒருவரும், டுபாய்யை சேர்ந்த ஒருவரும் 36 கடற்படையினரும் அடங்குவர்.

இன்று (04) வரை கடற்படையினர் மொத்தமாக 830 பேர் உறுதுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 420 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 410 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். Nike shoes | Nike Off-White