Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2020 10:18:40 Hours

236 கடற்படையினர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

ஹோட்டல் புளூ வோட்டர்ஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் (2) மற்றும் நிபுன பூஸ்ஸ (16) ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மொத்தம் 18 பேர் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று (05) தனிமைப்படுத்தல் சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறினார்.

இன்று வரை (05) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 11,727 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,222 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதற்கமைய இலங்கைக்கான யுஎல் 1206 விமானத்தில் நாளை (6) ஆம் திகதி ஜெர்மனி ஹம்பர்க்கிலிருந்து மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளது, இதில் வெளிநாட்டு துறைமுகங்களில் சிக்கித் தவிக்கும் 236 சிவில் கப்பலில் சேவையாற்றுபவர்கள் வரவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளுக்கு பின்னர் அனுப்பவுள்ளனர்.

இன்று (05) ஆம் திகதி வரை கடற்படையினர் மொத்தமாக 844 பேர் உறுதுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 443 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 401 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். Nike shoes | Nike