Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2020 11:18:40 Hours

நன்கு விரிவாக்கப்பட்ட பொது உடற்பயிற்சி ஓடு பாதை கட்டம் - 4 திறப்பு

ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தைச் சூழவுள்ள மக்களுடன் சிறந்த நட்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் துரு மிதுரு - நவ ரட்டக் எனும் விவசாய மற்றும் அழகப்படுத்தல் திட்டத்தின் கீழ் 2.6 கி.மீ நீளமுள்ள முழு பொது உடற் பயிற்சி ஓடு பாதை மின் விளக்குகள் பொருத்தி அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று (3) மாலை திறந்து வைக்கப்பட்டதுடன் கட்டம் 4 ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தலைமையக போர் உபகரண வழங்கல் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகரவின் அழைப்பின் பேரில் நினைவு பலகையை திறந்து வைத்து உடற்பயிற்சி ஓடு பாதை பொது மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. இது "சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் அதனை மேம்படுத்த ஊக்குவிப்பதும் மனிதர்களின் நல்வாழ்வுக்கும் சிறந்த ஒரு தீர்வாகும் அதே நேரத்தில் சுற்றுப்புர சூழலைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிடின் அசாதாரண காலநிலை மாற்றங்களைத் தடுக்க முடியாது அடுத்த தலைமுறை பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது நகர்ப்புற அழகுபடுத்துதல், மரம் நாட்டல்வு, உடற் பயிற்சி நடை பாதைகள், கைவிடப்பட்ட வயல்களை மீண்டும் விதைத்தல் போன்ற திட்டங்களை மேற்கொண்டார். அதே திட்டத்தை மீண்டும் புதுப்பித்து நாட்டை அரிசியில் தன்னிறைவு பெறுவதற்கான திட்டங்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய அழகுபடுத்துதல் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார், இதற்காக பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா 'துரு மிதுரு நவ ரட்டக்.

திட்டத்தை 30 ம் திகதி டிசம்பர் மாதம் 2019 அன்று தொடங்கினார் அதன் கட்டம் - 4 2020 ஜூன் மாதம் 03 திகதி நிறைவிற்கு வந்த்து. 'துரு மிதுரு நவ ரட்டக் திட்டம் கட்டம் - 4 பொது மக்களுக்கு சுற்றுப் புறங்கள் பற்றிய பரந்த பார்வைக்கும் உடல் தகுதி மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இராணுவத் தலைமையகத்தின் தலைமையக படையணி படையினரால் நிறைவு செய்யப்பட்டது. இதன் கட்டம் 1 2 மற்றும் 3, 2019 டிசம்பர் மாதம் - 2020 மார்ச் மாதங்களில் முடிக்கப்பட்டன.

அரசின் பசுமை திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 23 டிசம்பர் 2019 அன்று லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா துரு மிதுரு - நவ ரட்டக் எனும் திட்டத்தினை அறிமுகம் செய்து காடு வளர்ப்பு அழகுபடுத்தல், நகர்ப்புற காடுகள், பசுமையான பாதைகள், பச்சை வீட்டு விவசாயம் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார். சுழல் பராமரிப்பு அதிகார சபை சந்தியிலிருந்து இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயில் வரையான ஓடு பாதையில் 170 'அரலிய' மரக்கன்றுகளை நாட்டியதன் மூலம் 'துரு மிதுரு - நவ ரட்டக்த்தக்' பெரும் திட்டத்தின் கட்டம் - 1 ஆரம்பமானது.

2020 ஜனவரி 14 திகதி அத் திட்டத்தின் கட்டம் – 2 அரசாங்கத்தின் சௌபாக்கியத்திற்கான தொலைநோக்கு கொள்கைக்கு அமைய கைவிடப்பட்ட 12 ஏக்கர் நெல் வயல்களை மீண்டும் உழவு செய்யப்பட்டது. அதே நாளில், இராணுவத் தலைமையகத்திற்குச் செல்லும் சுமார் 1.7 கி.மீ நீளமுள்ள பாதையின் இரு புறமும் புன்னை மற்றும் மந்தாரை 140 கன்றுகள் நாட்டப்பட்டன.

கட்டம் - 3 சமூகம் சார் பொது பயன்பாடு, இராணுவம் துணைச் சேவைகள் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலில் பல கண்காட்சிகள் திறத்தல் ஆகியன 2020 மார்ச் மாதம் 06ம் திகதி நடைபெறுகின்றன. அதனோடு துரு மிதுரு - நவ ரட்டக் இன் பிரதான தகவல் பலகை திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்துபொதுமக்களின் உடல் பயிற்சிக்காக 2 கி.மீ நீள நடை பாதை மூன்று வலயங்களாக புதிதாக கட்டப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டு பாதையோர ஏரி அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. Running sport media | Air Jordan Release Dates Calendar