Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2020 19:54:49 Hours

ஜனாதிபதி செயலணி (PTF) கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசியசெயல்பாட்டு மையத்தில் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி செயலணி (PTF) சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னியார்ச்சி மற்றும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் ராஜகிரியாவில் இன்று (03) மாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் பங்குபற்றலுடன் கலந்துரையாடலை நடத்தினார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களையும், அழைப்பாளர்களையும் முதலில் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.

இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறிவித்தபடி முறையான நடைமுறைகளுக்கு பொதுமக்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வரவிருக்கும் பொசன் பருவத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய உத்திகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

இங்கு ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து வருபவர்ளை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சிறந்த நிர்வாகத்தில் பொருத்தமான மேம்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

பிசிஆர் பரிசோதனைகள் நடத்துதல், வெளிநாட்டினரின் வருகை மற்றும் நடந்துகொண்டிருக்கும் தடுப்புப் பணிகளின் முன்னேற்றம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள், வெளிநாட்டிலிருந்து மக்களை மேலும் அழைத்து வருவது, தனிமைப்படுத்தல் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர தேவைகளில் மேலதிக தனிமைப்படுத்தல் மையங்களை ஆரம்பித்தல் போன்றவை தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்டனர். jordan release date | Releases Nike Shoes