Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 22:25:19 Hours

மேலும் 291 பேர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வருகை

சிங்கபூரிலிருந்து மேலும் 291 பேர் நேற்று மாலை (02) இலங்கை விமானம் யுஎல் 303 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (03) ஆம் திகதி காலை தெரிவித்தார் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று 03 ம் திகதி வரை முப்படையினரால் நிருவகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மொத்தம் 11,669 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது படையினரால் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் 40 தனிமை படுத்தல் நிலையங்களில் 5,243 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று 2 ஆம் திகதி வரை கொவிட்- 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 40 பேர் பதிவாகியுள்ளனர்.

இன்று 03 ஆம் திகதி வரை கடற்படை வீரர்கள் 763 பேர் கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 07 கடற்படை வீர்ர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 418 பேர்கள் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர். 345 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Nike Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth