Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

01st June 2020 22:30:19 Hours

தளபதி ஹோட்டல் டொல்பின் கிளப்க்கு நன்றி பாராட்டு

தேசிய நலன்களுக்காக தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு முதன் முதலாக இலவசமாக முழு வளாகத்தை தனது ஊழியர்களுடன் இராணுவத்திற்குக் பெற்றுத் தந்தமைக்காக அதன் பிரதிநிதிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை தளபதி அலுவலகத்திற்கு அழைத்து கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஹோட்டல் டொல்பின் கிளப் இன் தலைவர் மற்றும் நிருவாகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்,

முழு உலகையே நிலைக்குழைந்த இத்தருணத்தில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் உடனடி தீர்மானத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலணி மற்றும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவியதன் ஊடாக முழு இராணுவத்தையும் ஈடுப்படுத்தி வெற்றிகரமாக பெருங்காரியங்கள் நிறைவேற்ற முடிந்தன.

நாளுக்கு நாள் சமூகத்தில் தொடச்சியாக கூட்டாக தொற்றாளர்கள் இணங்காணப்பட்டமையாலும் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டிய வெளிநாட்டு தலைநகரங்களில் வைரஸ தாக்கம் காரணமாக சிக்கித் தவித்த இலங்கையர்கள் நூற்றுக்கணக்கில் திருப்பி வந்தமையாலும் தனிமைப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையிலான கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திற்கும் முப்படையினருக்கம் பெரும் சவாலாக அமைந்தது. எனவே தற்காலிக முகாம்கள் வேறு இடங்களை குறுகிய காலத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களாக உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வடமேற்கு கரையோரத்தின் மிக ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான நீர்கொழும்பு வைக்கால் பிரதேசத்தில் விமான நிலையத்திற்கு மிக அருகில் காணப்படும் கிளப் ஹோட்டல் டொல்பின் நிறுவனம் முப்படையினருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முதன் முதலில் வழங்கியது அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் முப்படையினரின் உயிராபத்தான ஆபத்தான பாத்திரங்களை முழுமையாக அங்கீகரிக்கின்றனர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் (ஓய்வு) துஷ்யந்த ராஜகுரு மற்றும் திருமதி ஷிரோமி மசகோரல ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செரண்டிப் ஹோட்டல்கள் நிறுவத்தின் குழுமப் பணிப்பாளர் திரு அப்பாஸ் இசுபல்லி அவர்கள் உடனடியாக 154 அறைகளைக் கொண்ட முழு ஹோட்டலையும் இவ் உன்னதமான தேசிய பணிக்காக ஹோட்டல் ஊழியர்களுடன் இலவசமாக பெற்றுத் தந்தார் .

கிளப் ஹோட்டல் டொல்பின் முகாமையாளர் திரு சுரேஷ் அத்துகோரல உடன் நிருவாக ஊழியர்கள் மற்றும் இதர ஊழியர்களாக, மொத்தம் 60 க்கும் மேற்பட்ட்டவர்களுடன் இராணுவ வீரர்கள் இணைந்து மார்ச் 29ம் திகதி தொடங்கிய இந்த பணி தங்களது வழக்கமான வணிக நடவடிக்கைகளை தொடங்கும் வரை 229 மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் பெறுமதியை கணக்கிட்டால் சுமார் ரூ .6.3 மில்லியன் ஆகும்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நமது சமூகத்தின் நல்வாழ்விற்காக மிக அவசரமான தருணத்தில் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார், மேலும் தளபதி பிரதிநிதி குழுவிற்கு அடையாள நினைவுச் சின்னங்களையும் பாராட்டுக் கடிதங்களையும் வழங்கினார்.

இந் நிகழ்வில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமப் பணிப்பாளர் திரு அப்பாஸ் இசுபல்லி, செரண்டிப் ஹோட்டல் நிறுவனத்தின் தலைவர் திரு ஸ்டீவன் என்டர்பி , ஹேமஸ் ஹோல்டிங்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு சாந்த குரும்பலபிட்டிய செரண்டிப் ஹோட்டல்களின் நிர்வாக பணிப்பாளர் திரு சுரேஷ் அத்துகொரல, கிளப் ஹோட்டல் டொல்பின் பொது முகாமையாளர் திரு குஷான் பதிராஜா, கிளப் ஹோட்டல் டொல்பின் பணிப்பாளர் திருமதி ஷிரோமி மசகோரல, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பாடல் பொது முகாமையாளரும் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) துஷான்ராஜகுரு, ஆகியோர் இச் சந்திப்பில் பங்குபற்றிருந்தனர்.