Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2020 08:14:02 Hours

பாதுகாப்பு தலைமை பிரதானி & இராணுவத் தளபதியவர்கள் அனைவருக்கும் 2020 – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில், கோவிட்-19 வைரசிற்கு எதிராக பங்காற்றும் படையினர்களுக்கு பாராட்டினை தெரிவிப்பதோடு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார். அவருடைய புத்தாண்டு செய்தியின் முழு விபரம் பின்வருமாறு.

சிங்கள மற்றும் தமிழ் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி அவர்களின் புத்தாண்டு செய்தி

பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி என்ற வகையில், மரபுகளுக்கு ஏற்ப இனிய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து அதிகாரிகள், படையினர் மற்றும் சிவில் ஊளியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான புத்தாண்டுக்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததன் பிரகாரம், வேகமாக பரவி வரும் கோவிட் -19 அச்சுறுத்தலால் நாம் இப்போது கடந்து வரும் காலம் நம் நாட்டிற்கு மட்டுமல்லாது பொதுவாக உலகின் பிற நாடுகளுஞக்கும் ஒரு சவாலாக உள்ளது.

சூரியன் மீனா ராஷியாவிலிருந்து (மீனம் மாளிகை) மேஷா ராஷியாவுக்கு (மேஷம் மாளிகை) நகரும் போது பொதுவாக மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கப்படும் புத்தாண்டானது தொடங்குகிறது என்பதை அனைத்து சிங்கள மற்றும் தமிழர்களும் அறிந்த விடயம். நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தியபடி, சமூக இடைவெளி, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் நமது செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம அந்த புத்தாண்டு சம்பிதாய மற்றும் சடங்குகளை நாம் அனைவரும் அவதானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீங்கள் குறித்த புத்தாண்டை கொண்டாடும் போது, சமூக இடைவெளிகளை கடைப்பிடித்த வண்ணம் கொண்டாடுமாறும் மற்றும் உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் வெளியே செல்லாமல் தொடர்புகளை வைத்துக் கொள்ளுமாறும். வெளியில் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி செய்யற்படுமாறும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த கலாச்சார விருந்தின் பிரதான குறிக்கோளாகக் கருதப்படும் ஒரு வருடத்தை நிறைவு செய்து புத்தாண்டுக்குள் நுழையும்போது, சிறந்த மனித குணங்கள் நிறைந்த ஒரு புதிய வாழ்க்கையின் வடிவமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை நாம் அனைவரும் பெற வேண்டிய நேரம் இது. கடந்த ஆண்டுகளில், நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி புத்தாண்டு விடியலை சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் ஒரு நல்ல நிமிடத்தில் நினைவுகூர்ந்தோம். அதே நேரத்தில் நட்பு, நல்லெண்ணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் நம்பிக்கையை மீண்டும் எழுப்பினோம். இந்த ஆண்டின் புத்தாண்டை கட்டுப்பாடுகளின் கீழ் கடைப்பிடிக்க நாங்கள் நிர்பந்திக்கப்பட்டிருந்தாலும், இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்தும் நம் அனைவருக்கும் இடையேயான புரிந்துணர்வு, ஒற்றுமை, நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

நாடு கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட போது முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவுவதன் மூலம் இந்த கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இரவு பகல் பாராது ஒத்திழைத்த நமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அனைவருமே பாராட்டத்தக்க வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர். பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ள உங்களின் அயராத அர்ப்பணிப்பினை பற்றி மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை. மேலும் இந்த புத்தாண்டு மற்றும் மற்றொரு புத்தாண்டு விடியலை நினைவுகூரும் இந்த நல்ல மற்றும் பாரம்பரிய சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மிகுந்த நன்றியுணர்வையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

'தேசத்தின் பாதுகாவலர்கள்' அல்லது பாதுகாவலர் என நீங்கள் பொதுமக்களிடையே அளித்துள்ள ஒப்புதல், பாராட்டத்தக்க பாத்திரங்களைக் கருத்தில் கொண்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் நிறைவேற்றப்படும் ஒரு மைல்கல் பணியாக உள்ளது. பாதுகாப்புத் தலைமை பிரதானி, இராணுவத் தளபதி மற்றும் கோவிட் -19 எதிரபாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் என்ற வகையில், இந்த கொடிய வைரஸிலிருந்து நாட்டினையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஆரம்பத்திலிருந்து நீங்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு சேவைகளை மிகவும் பாராட்டுகிறேன்

மற்றொரு புத்தாண்டின் தொடக்கத்தில், தாய்நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட துணிச்சலான மற்றும் தைரியமான வீரர்களாகிய நீங்கள் இதுவரை சம்பாதித்த கௌரவம், மரியாதை மற்றும் போற்றுதலை தொடர்ந்து வளர்த்து, மேலும் வீரியம்,வலிமை மற்றும் உறுதிப்பாடு போன்வற்றின் மூலம் வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கும் நான் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். அதேபோல், தாய்நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை ஆழ்ந்த மரியாதையுடனும் கௌரவத்துடனும் பாதுகாப்பதற்காக எங்கள் படைவீரர்கள் செய்த வீரம் மற்றும் தியாகங்களை நான் நினைவு கூர்கிறேன். மேலும் எனது புத்தாண்டு எண்ணங்களை அந்த உயிர் நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காயமடைந்த அனைத்து போர்வீரர்களும் விரைவாக குணமடைய வாழ்த்துகின்றேன். எனது புத்தாண்டு எண்ணங்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். கோவிட் -19 வைரசினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களும் நலமடைய வேண்டும் என்றும், அதனால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகள் மற்றும் நமது தாய்நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவது உட்பட நமது தேசத்தின் சிறந்த நலனுக்காக அவர்கள் அளிக்கும் எண்ணற்ற பங்களிப்புகளுக்கு அனைத்து அதிகாரிகள், ஏனைய படையினர் மற்றும் சிவில் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை மீண்டும் பெறுகிறேன். புத்தாண்டிலும் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் தொடர்ந்து பலத்தையும் ஞானத்தையும் பெற வாழ்த்துகின்றேன். 2020 ஆம் ஆண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடையதாய் அமையட்டும். (முடிவு)jordan Sneakers | nike air max 95 obsidian university blue book list