Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2020 19:02:33 Hours

முல்லைத்தீவு விவசாயிகளுக்கான நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் படையினரால் ஆரம்பிப்பு

முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள விவசாயிகளால் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத்தளபதி அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் , நந்திக்கடலை தளமாகக் கொண்ட காய்கறி பயிரிடும் விவசாயிகள் அந்த பகுதியில் நடமாடும் காய்கறி விற்பனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளையில், விவசாயிகள் தங்கள் அறுவடைகளை விற்பனை செய்வதற்காக சந்தைகளுக்கு செல்வதைத் தடுத்துள்ளதால், இந்த வீட்டுக்கு வீடு நடமாடும் விற்பனை வழிமுறையானது உள்ளூர் அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வசதி செய்து கொடுக்கப்பட்டது.

642ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் 17 கஜபா படையினர் ஒடுசுடான் பிரதேச செயலகம், கிராம நிலதாரி (அரச அதிகாரி), பொலிஸ் மற்றும் அப்பகுதியின் பிற சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் காய்கறி விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (5) முதல் தங்களது காய்கறிகளை விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக மற்றும் பிரதேச செயலாளர் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களில் இந்த திட்டமானது 59 மற்றும் 68 பாதுகாப்பு பிரிவுகளால் முல்லைத்தீவின் ஏனைய பிரதேசங்களிலும் விரிவுபடுத்த உள்ளது. short url link | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf