Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2020 23:59:52 Hours

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மேலும் இரண்டு வார கால சுய தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுமாறு நோப்கோ தலைவர் வலியுறுத்தல்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மாலை (5) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

"இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மற்றும் குண்டசாலே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மொத்தம் 279 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் கிடைத்த பின்னர் இன்று (5) காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர். முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு இதுவரை மொத்தம் 3169 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியேறினர். தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வெளியேறிய அனைவருமே தங்கள் வீடுகளில் இன்னும் இரண்டு வார கால சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வேண்டிககொள்ளப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக, இரண்டு வார கால தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட மற்றொருவர் தனிமைப்படுத்தல் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு கோவிட்-19 வைரஸ் இருப்பதை உறுதிசெய்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா கூறினார்.

"அதேபோல், இந்தியாவில் ஒரு சமய மாநாட்டிலிருந்து திரும்பிய அக்குரனையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 144 நபர்கள் இன்று அதிகாலை இராணுவத்தால் பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டனர், அதே நேரத்தில் அக்குரனையூம் அட்டலுவகம பகுதிகள் தொடர்ந்து தனிமையில் உள்ளன. மேலும் வெள்ளிக்கிழமை (3) மகரகம பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 வைர நோயாளியுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்படும் 45 நபர்கள் அடங்கிய குழுவும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு இன்று (5) அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல், ரத்மலானை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்ட மேலும் 34 நபர்கள், பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒருகொடவத்தைலிருந்து நோயாளியின் 21 உறவினர்கள் உட்பட மொத்தம் 55 நபர்கள் இன்று (5) இல் ப+னானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டனர் "என்று நோப்கோ தலைவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும், கோவிட்-19 வைரஸ் நோயாளியுடன் தொடர்பு கொண்ட 17 நபர்களை (மத்துகமவிலிருந்து 8 பேரும்இ அகுரெஸ பகுதிகளைச் சேர்ந்த 9 பேரும்) அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேபோல், பிலியந்தலாவைச் சேர்ந்த மேலும் 6 நபர்களும், மஹியங்கனயைச் சேர்ந்த 17 பேரும் அக்குரனை மற்றும் பிலியந்தல பகுதிகளைச் சேரந்த வைரஸ் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் பூனானை உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட 217 நபர்கள் கொண்ட குழுவும் நாளை (6) காலையில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல தயாராக உள்ளது, ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா கூறினார்.

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள மக்களின் மனநல சமநிலையையும் நல்வாழ்வையும் தக்கவைத்துக்கொள்வதற்காக, ஊரடங்கு நேரத்தில் அதிமேதகு ஜனாதிபதியும் கௌரவ பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முப்படையினரும் காவல்துறையினரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் இசை பொழுதுபோக்குகளை அரங்கேற்ற ஏற்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல், இராணுவ இசை குழுக்கள் அத்தகைய ஒரு இசை பொழுதுபோக்குகளை ஹேவ்லாக் நகரில் நடத்தின. மேலும் இதுபோன்ற சில நிகழ்ச்சிகள் ராஜகிரிய ஐகானிக் வீட்டுவசதி வளாகத்திலும் இன்னும் சில இடங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் இசைக் குழுக்கள் தொடர்ந்து மக்களின் நலன்களுக்காக இத்தகைய ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள். தேவையான சமூக தூர மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை வைத்து, அந்த இசை நிகழ்ச்சிகளை ரசிக்க மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்றார்.

கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடற்படையினர் இன்று (5) கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தை முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்தன. நேற்று (4), விமானப்படை தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் விமானப்படை ஊழியர்கள் விமான நிலையத்தின் வெளியேறல் பகுதி, நீர்கொழும்பு வைத்தியசாலை வளாகத்தையும், கொழும்பு தேசிய வைத்தியசாலை இருதயவியல் பிரிவையும் கிருமி நீக்கம் செய்தனர். கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளின் வழிகாட்டுதலின்படி அடுத்த சில நாட்களில் இதே போன்ற திட்டங்கள் தொடரும் ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா குறிப்பிட்டார். Running Sneakers Store | Nike Shoes