Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2020 16:35:05 Hours

யழ் படையினரால் நிவாரணப் பெருட்கள் மற்றும் வைத்தியசாலை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கள்

கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்த்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்று அதன் கீழுள்ள அனைத்து படையகங்களின் படைளினர் , மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஒத்துமைப்புடன் கடந்த காலங்களில் பல நிவாரணத் திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள்,கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய ஆகியோர் இதற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டனர்.

அரசினால் வழங்கப்பட்ட அன்னளவாக 4500 உலர உணவுப்பொருட்கள் இராணுவத்தினரின் வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை 28 ஆம் திகதி வழங்கப்பட்டன. அரச அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் படையினர் அவர்களினுடைய வீடுகளுக்கு சென்று அரிசி,பருப்பு,டின் மீன்,மசாலாக்கல்,மரக்கறிகள்,பால் மா உள்ளடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

இதேபோல், கடந்த நான்கு நாட்களில் (மார்ச் 25-28) மற்றொரு திட்டத்தில் படையினர்,வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து 12,000 வறிய குடும்பங்களுக்கு சுமார் 24,000 கிலோ கோதுமை மாவினை யாழ்ப்பாண தீபகற்பத்தில் விநியோகித்தனர். இது அந்தந்த அரச அதிகாரிகள் மற்றும் பிரிவுகளில் படைப்பிரிவுகளில் உள்ள தளபதிகள் மற்றும் கட்டளத் தளபதிகளின் ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. சமூகம் சார்ந்த இந்த திட்டத்திற்கு இராணுவ லொரிகள், பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் செவ்வாய்க்கிழமை (24) இரத்தப் இருப்பினை நிரப்புவதற்காக துருப்புக்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 4 ஆவது இலங்கை இராணுவ மருத்துவப் படையில் (4 SLAMC) நடைபெற்ற ஏற்பாட்டின் போது தங்கள் இரத்தத்தை வழங்கினர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்த திட்டத்திற்கு உதவினர். இந்த நிகழ்வின் போது ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.spy offers | Air Max