Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2020 21:02:00 Hours

கோவிட்-19 நோயாளர்களின் தனிமைப்படுத்தலுக்கான 50 படுக்கைகளைக் கொண்ட கட்டிடம் தயார் நிலையில்

சுகாதார அமைச்சர் கௌரவ திருமதி பவித்ரா வன்னிஆராச்சி ,பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் பல அதிகாரிகளுடன் இணைந்து வியாழக்கிழமை 26 ஆம் திகதி மாலை சிலாபம்,இரனவிலயிலுள்ள அரசுக்கு சொந்தமான வொய்ஷ் ஒப் அமேரிக்கா கட்டிடத்தை கோவிட்-19 நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்து மருத்துவம் செய்வதற்கான களங்களாக பாவிப்பதற்காக பரிசீலனை செய்தனர்.

இதுவரை பயன்படுத்தப்படாத இந்த கட்டிடத்தில் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைக்காக 50 படுக்கைகள் இடமளிக்க முடியும். லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லெப்டினன் கேணல் ஆசிறி முஹந்திரம்கே அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் படையினர் 5 நாட்களுக்குள் முழு கட்டிடத்தையும் மேம்படுத்தி திருத்தியமைக்கும் பணியை பொறுப்பெடுத்துள்ளனர்.

பரிசீலனையின் போது, சுகாதாரம், சமையல் வசதிகள் போன்றவற்றுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.

சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாகாண சபை மற்றும் நகராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.latest jordans | Sneakers