Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2020 17:00:50 Hours

இராணுவத் தளபதி புதிய சமயலறை கட்டிடத் தொகுதியினை மேற்பார்வையிடல்

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று காலை 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய சமயலறை கட்டிடத் தொகுதியினை பார்வையிடச் சென்றார்.

பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அண்மையில் நன்றாக அமைக்கப்பட்டுவரும் இப்புதிய சமயலறை கட்டிடத் தொகுதியின் நிர்மானப் பணிகள் முடிந்தவுடன் இராணுவத்தில் சேவைபுரியும் 4000 மற்றும் ஏனைய படையினர்களுக்கான சமைத்த உணவுகளானது வழங்க்கூடியதாக காணப்படும். தற்பொழுது குறித்த உணவுகாளானது நாரஹேன்பிட்டயில் சமைக்கப்பட்டு இராணுவ சேவா வணிதா பிரிவின் சிற்றுண்டியினூடாக இராணுவத் தலைமையகத்தில் மானியஅடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இராணுவ தலைமையக்தில் உள்ள ஏனைய படையினர் சிறந்த தரமான சூடான உணவுகளை பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்தும் முகமாக ஏப்ரல் மாத முடிவிற்கு முன்னர் குறித்த கட்டிட வேலைகளை நிறைவு செய்யுமாறு 14 ஆவது பொறியிலாளர் சேவைப் படையணிக்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார்.

அங்கு பார்வையிடச் சென்ற லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கட்டிட திட்ட வரைபடத்தினை பார்வையிட்டதுடன் அதன் சாத்தியக்கூறுகளையும் ஆராய்நதார். அத்துடன் 14 ஆவது பொறியிலாளர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அங்கு கட்டிட வேளையில் ஈடுபட்டுள்ள படையினரகளுடன் உரையாடினார். உகரண மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர ,முகாமைத்துவ மற்றும் பரிபாலனை பணிப்பாளர் பிரிகேடியர் பிரசாந்த விமலசேன மற்றும் சில அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். Buy Kicks | Air Max