Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2020 13:00:22 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மூன்றாவது குழுவினரை வழியனுப்ப இராணுவத்தினால் போக்குவரத்து ஏற்பாடுகள்- இராணுவத் தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (நோப்கோ) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (25) நடைபெற்றது.

"பூனானை மற்றும் கண்டகாடு ஆகிய இடங்களில் உள்ள இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசேதனையை நிறைவு செய்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கொண்ட 3 வது குழு வியாழக்கிழமை (26) தங்கள் வீடுகளுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 144 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இன்று (25) காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வதற்கு இராணுவத்தால் பேருந்துகள் மற்றும் லொரிகள் வழங்கப்பட்டன. 46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 3086 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். (மார்ச் 1-15) காலப்பகுதியில் நாடு திரும்பிய 20,000 பேர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சுமார் 7500 நபர்கள் இன்னும் சுய தனிமைப்படுத்தலில் அல்லது தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர், ”என்று கோவிட் எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி அவர்கள் தெரிவிக்கையில் ஒரு கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட (25) ஆம் திகதி முற்பதுதியில் பதிவாகவில்லை, இது உலக நாடுகளில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இவ் வைரஸ் தொற்று அதிகரிப்புடன் ஒப்பிடும்போது, முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாக காணப்படுகின்றது. "நாங்கள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை நாங்கள் இன்னும் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர், டொக்டர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவிக்கையில் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சமூக தூரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். "சந்தேகத்திற்கிடமான 255 நோயாளிகள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், கிட்டத்தட்ட 1500 பேர் சுகாதார அமைச்சினால் கண்கானிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போது கழுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் உள்ள கிட்டத்தட்ட 900 வெளிநாட்டினர் தொடர்ந்து இருப்பது முக்கியம், ”என்று அவர் மேலும் கூறினார். Nike shoes | Ανδρικά Nike