Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2020 16:05:36 Hours

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 2020 ஆண்டிற்கான வருடாந்த கல்வி அமர்வுகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வானது தெகிவலையில் உள்ள அத்திடிய ஈகல்ஸ் லேக் சைட் ஹோட்டலில் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.இதில் அதிகமான மருத்துவ ஆலோசகர்கள் தொழில் வல்லுநர்கள் மற்றும் இராணுவ மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களுடன் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாஇ கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உள்ளிட்ட பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (15) ஆம் திகதி பிற்பகல் வரை பல தலைப்புகளை உள்ளடக்கி காம்பாட் மெடிசின், டைவிங் மற்றும் ஹைபர்போலிக் மெடிசின், ஏவியேஷன் மெடிசின் மற்றும் கெமிக்கல் பயோலாஜிக்கல் ரேடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர் (சிபிஆர்என்) போன்றவை பாம்புக் கடித்தல், நரம்பு காயங்கள், வீரியம் போன்ற மருத்துவங்களுடன் தொடர்பான விரிவுரைகள் இடம் பெறவுள்ளதுடன் இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பொதுவான நோய்கள், வைரஸ்கள், தற்செயலான மருத்துவ அச்சுறுத்தல்கள் தொடர்பான புதுப்பிப்புகள், நோயியல் அம்சங்கள், நோய் தீர்க்கும் அம்சங்கள் போன்றவற்றில் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவுரையில் சுருக்க வடிவில் விஞ்ஞான ஆவணங்களை முன்வைத்து ஆராய்ச்சியாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் முந்தைய அமர்வுகளுக்கு ஒத்ததாக, பங்கேற்பாளர்களின் அறிவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, மருத்துவரல்லாத தலைப்புகளுக்கு இடமளிக்க இந்த அமைப்பாளர்கள் எதிர்பார்கின்றனர்.. .

இந்த கல்வி அமர்வுகளில் முப்படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) பரிமாணங்களை உள்ளடக்கிய இராணுவ மருத்துவம், நீருக்கடியில் மருத்துவம் மற்றும் விமான மருத்துவம் உள்ளிட்ட இராணுவ மருத்துவமானது உள்ளடக்கப்படும். இதில் பல விஞ்ஞான அமர்வுகள் இராணுவ மருத்துவத்தின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் தொற்றா நோய் குறித்த பல புதுப்பிப்புகளுடன், இந்த அமர்வுகள் அறிவியல் ஆவணங்கள் விளக்கக்காட்சிகள் மற்றும் சமமான சுவரொட்டி விளக்கக்காட்சிகளுடன் நிகழ்தப்படும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். மேலும், அமர்வுகளில் இராணுவ மருத்துவம், இராணுவ பல் மருத்துவம் மற்றும் இராணுவ உளவியல் தொடர்பாக பல விரிவுரைகள் இடம் பெறவுள்ளன.

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியhனது அங்கத்தவர்களின் தொடர்ச்சியான இந்த தொழில்முறை வளர்ச்சி, பல ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, இராணுவ மருத்துவத் துறையில் பயிற்சியாளர்கள் மற்றும் வாதிடுதல், இராணுவ மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கையின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலுக்கு உதவுவதற்காக, வளங்களை நிர்வகித்தல், சிக்கல் தீர்க்கும் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளுடன் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் பத்திரிகையின் வெளியீடுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமர்வுகளில் 250 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத் துறைகளுக்கு பொருத்தமான பிற கல்லூரிகளிலிருந்து பலர் பங்கேற்கின்றனர். 120 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச இராணுவ மருத்துவ கவுன்சிலில் (ஐ.சி.எம்.எம்) இலங்கையின் உறுப்பு நிலையானது இந்த விடயத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது இராணுவ உளவியல் தொடர்பாக பல விரிவுரைகள் இடம் பெறவுள்ளன. இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வுகளின் போது தங்களது பயனுள்ள விவாதங்களைத் தொடரவும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்துடன் கூட்டாண்மைகளை வளர்க்கவும் ஒழுங்கமைப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் விமானப்படையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சேர்ந்து 2016 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் அதன் தொடர்ச்சியான உயர்வுக்கு அர்ப்பணித்த இராணுவ சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (டாக்டர்) சஞ்சீவ முனசிங்க அவர்களும் கலந்து கொண்டார். Sports Shoes | Nike Shoes