Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2020 20:41:04 Hours

வீரத் தாய்மார்களை கௌரவித்து ‘வீர மாதா’ நிகழ்வு

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ சேவா வனிதா பிரிவு, ரணவிரு சேவைப் பணியகம், ஆளனி நிருவாக பணியகம், மற்றும் மாஸ்டர் ஜெனரல் போர் கருவி கிளையின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (12) ஆம் திகதி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களது விதைவையான 110 வீர பெண்மணிகளை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதியின் அழைப்பையேற்று ஜனாதிபதியின் பாரியாரான மதிப்புக்குரிய திருமதி ஜயோமா ராஜபக்ஷ அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் வரவேற்றார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களது துணைவிமார்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து தங்களது பிள்ளைகளை வைத்திய அதிகாரிகள், பொறியியலாளர்கள், வழக்கறிஞ்சர்கள், கணக்காய்வாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள், அறிவுரையாளர்கள், தொழில்நுட்ப சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞானிகள், நிலஅலவையாளர் போன்ற துறைகளில் அவர்களை வளர்ச்சியடையச் செய்த தாய்மார்களை கௌரவிக்கும் முகமாக இந்த ‘ வீர மாதா” நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நாட்டிற்காக உயிர் தியாகம் இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இந்த நிகழ்வில் முதல் அங்கமாக இரண்டு நிமிட மெளன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு பின்னர் தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ ஆவணப்பட காட்சிகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வைத்துள்ளனர்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களது துனைவி மார்கள் 110 பேருக்கு ஜனாதிபதியின் பாரியாரான திருமதி ஐயோமா ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்திரானி குணரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்த தி உதிதமால ஜயநந்தினி, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபஹவி டயஸ் மற்றும் டிஎப்சிசி வங்கியின் பிரதி தலைவர் திரு அன்டன் ஆறுமுகம் போன்றோர் சான்றிதழ்களும், 30,000/= ரூபாய் பரிசு பொதிகளும் இந்த தாய்மார்களுக்கு இந்த நிகழ்வினூடாக வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஜனாதிபதியின் பாரியாருக்கு இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியாரும் இணைந்து இவரது வருகையினை கௌரவிக்கும் முகமாக நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தனர்.

வீரத்தாய்மார்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பை கௌரவித்து 8 சலவை இயந்திரம், 2 சக்கர நாற்காலி இயந்திரங்கள் உள்ளடக்கப்பட்ட 4 லட்சம் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேவா வனிதா பிரிவின் அனுசரனையில் இந்த நிகழ்வினூடாக வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியில் பிரதம அதிதியுடன் அனைத்து இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவிகளும் குழுப்புகைப்படத்தில் இணைந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் போர்கருவி மாஸ்டர் ஜெனரல் கிளையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர்.Authentic Nike Sneakers | Trending