Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2020 20:05:50 Hours

சமிக்ஞை படையணியின் படைத்தளபதி இராணுவத் தளபதியை சந்திப்பு

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் சமிக்ஞை படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை வியாழக்கிழமை (20) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இராணுவத் தளபதியவர்கள் இராணுவத்தின் வளர்ச்சிக்காக அவர் வழங்கிய பங்களிப்பிற்கு தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக சேவையாற்றிய சமிக்ஞை படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்கள் , லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடனான தனது சந்திப்பின்போது கடந்தகால விடயங்களை நினைவுகூர்ந்தார். சமிக்ஞை படையணியின் தளபதி இராணுவத்தின் தொழிநுட்ப மற்றும் டிஜிடல் தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக இராணுவத் தளபதியவர்களும் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

இராணுவத் தளபதியவர்கள் தனக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் விசேட ஞாபகச்சின்னத்தினை அவருக்கு வழங்கி வைத்தார்.

சமிக்ஞை படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்கள் இராணுவத்தில் பல கட்டளை மற்றும் பதவி நிலை பதவிகளை வகித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்களின் சுய விபரங்கள் பின்வருமாறு மேஜர் ஜெனரல் நிலந்த மகேஷாதேவ ஹெட்டிஆராச்சி வி.எஸ்.வி யு.எஸ்.பி பி.எஸ்.சி எச்.டி.எம்.சி எம்.எம்.எஸ், அவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பெருமைமிக்க மாணவராவர். தனது பாடசாலை கல்வி படிப்பிற்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் நிரந்தர படையணியின் 21 ஆவது உள்ளீர்ப்பு கெடட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தனது அடிப்படை பயிற்சியை தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமி, மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இரண்டாவது லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட அவர் 1 ஆவது இலங்கை சமிக்ஞை படையணியின் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். இலங்கையில் உள்ள இராணுவ கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி, அமெரிக்காவின் போர்ட் கார்டனில் உள்ள அமெரிக்க இராணுவ சமிக்ஞை மையம் மற்றும் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு முகாமைத்துவ கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவராக திகழ்ந்தார்.

இந்தியாவின் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ அறிவியலில் முதுகலை பட்டத்தினையும் பெற்றார். தற்போது, இலங்கை இராணுவத்தின் தலைமை சிக்னல் அதிகாரி மற்றும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத்தளபதியாக சேவையாற்றி வருகின்றார். அர்ப்பணிப்பு மற்றும் விவேகமாக முப்பத்து நான்கு ஆண்டு வருடங்களாக சேவையாற்றி வருகின்ற அவர் பல பல கட்டளை, அறிவுறுத்தல் மற்றும் பதவி நிலை நியமனங்களை வகித்துள்ளார்.

கூட்டு நடவடிக்கை தலைமையகத்தில் உளவுத்துறை அதிகாரி, இலங்கை சமிக்ஞை படையணியின் 4ஆவது மற்றும் 5ஆவது ஆர்.டிஎப் பட்டாலியன் கட்டளை அதிகாரி, சமிக்ஞை கல்லூரியின் தளபதி, பொது பதவிநிலை கிளை மற்றும் இராணுவ செயலாளர் கிளையின் பதவி நிலை அதிகாரி தரம் 1 மற்றும் , வவுனியா பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் தொடர்பாடல் மற்றும் ஈ.டபிள்யு ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உதவி தலைமை கட்டுப்பாட்டாளர், 59 மற்றும் 23 காலாட்படை பிரிவுகள், தொண்டர் படை தலைமையகம் மற்றும் ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை கொழும்பு, கேணல் பதவி நிலை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தொடர்பு ஆலோசகர், இலங்கை இராணுவ சமிக்ஞை படை கட்டளைத் தளபதி, இராணுவ பயிற்சி கட்டளையின் பிரிகேடியர் கோட்பாடு மற்றும் வியூக கட்டளை அதிகாரி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் நிருவாக அதிகாரி, வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளபதி போன்ற பிரதான பதவிகளை வகித்துள்ளார்.

தனது இராணுவ சேவையின் போது இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பல தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய வெளிநாட்டு பாடநெறிகளை கற்றுக் கொண்டார்.. சிங்கப்பூர், நேபாளம், மங்கோலியா மற்றும் சில நாடுகளில் நடந்த பல சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் நிலந்த மகேஷாதேவ ஹெட்டிஆராச்சி அவர்களின் இலங்கை இராணுவத்துக்கும் தேசத்துக்கும் விசுவாசமான சேவைக்காக விஷிஷ்ட சேவ விபூஷன (வி.எஸ்.வி) மற்றும் உத்தம சேவ பதக்கம (யு.எஸ்.பி) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், பூர்ண பூமி படக்காம, வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், வடமராச்சி மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம், ரிவிரெச சேவை பதக்கம், 50 ஆவது சுதந்திர ஆண்டு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 ஆவது ஆண்டு பதக்கம் மற்றும் இலங்கை இராணுவ நீண்டகால சேவைகள் பதக்கம் உள்ளிட்ட பல பதங்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனந்த கல்லூரியில் முதலாம் வகுப்பு முதல் உயர் தர கல்வி வரையான தனது 14 ஆண்டு பாடசாலை கல்வியின் போது, தனது படிப்புக்கு மேலதிகமாக, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். ஆனந்த கல்லூரிக்கு பல வெற்றிகளைக் கொண்டுவந்த அவர் 1981 முதல் 1983 வரை கல்லூரி நீச்சல் கிளப்பின் கேப்டனாகவும், கல்லூரி உயிர்காப்பு கிளப்பின் முதல் கெப்டனாகவும் செயற்பட்டார், சிரேஷ்ட மாணவர் தலைவர், கல்லூரி சாரணர் படை, கராத்தே சங்கம், புத்த சங்கம் மற்றும் ரேடியோ சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அவர் இயற்பியல் அறிவியல் துறையில் ருஹுன பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் நிலந்த மகேஷாதேவ ஹெட்டிஆராச்சி வி.எஸ்.வி யு.எஸ்.பி பி.எஸ்.சி எச்.டி.எம்.சி எம்.எம்.எஸ் அவர்கள் 1992 ஆம் ஆண்டில் கேஷினி ஹெட்டிஆராச்சியை மணந்தார், மேலும் சிரத் மற்றும் ரமித் ஆகிய இரு மகன்கள் இவர்களுக்கு உண்டு. பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய இருவரும் ஆனந்த கல்லூரியில் கல்வி கற்றவர்கள். Best jordan Sneakers | Jordan Release Dates , Iicf