Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2020 17:38:57 Hours

தனியார் நிறுவனத்தினால் இராணுவ பயன்பாட்டிற்கு அதிநவீன மருத்துவ பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு

சீனா,வூஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் (கோவிட்-19) பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறிய சிப்பான முறையில் முகாமைத்துவம் செய்த இராணுவத்தினரின் திறமைக்காக, அன்செல் லங்கா வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினரால், எதிர்காலத்தில் அவசர தேவை நிமித்தம், இராணுவத்தில் பயன்படுத்துவதற்காக 25 அதிநவீன மருத்துவ பாதுகாப்பு உடற் கவச உடைகள், பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இன்று காலை (20) அன்பளிப்பு செய்யப்பட்டன.

லுதுவேனியா நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த பாதுகாப்பு உடற் கவச உடைகளானது 5000/= அமேரிக்க டொலருக்கும் மேலான பெறுமதியைக் கொண்டவையாகும். இக் கவச உடைகளானது பக்டீரியா, இரசாயனம் மற்றும் உயிரியல் ஆபத்துகள்,வைரஸ் தொற்று நோய்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்க வல்லமை கொண்டது. இவ்வன்பளிப்பானது நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ ஆளனி நிறுவாக பணிப்பாளர் பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள்ளுக்கு ஒப்பான தரத்தைக்கொண்ட குறித்த உடற் பாதுகாப்பு கவச உடைகளானது தரமானதாகவும் மீளப்பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. குறித்த அதே நிறுவனம் 25 உடற் கவச உடைகளை முல்லேரியாவில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நன்கெடையாளர்கள் இராணுவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அவர்களின் பாராட்டுக்காக,லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது நன்றியினை அவர்களுக்கு தெரிவித்தார்.

அன்செல் லங்கா வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான திரு ஒகஸ்டின் போட்டிலோ, மனித வள பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் திரு திஸ்ஸ தலகுண, விணியோக பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் திரு டைலர் கிளிபோட், மற்றும் அன்செல் லங்கா வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஆர்& டி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் திரு தர்ஷன அபேவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். jordan release date | Sneakers