Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2020 16:48:58 Hours

சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியவர்கள் இலங்கை வருகை

சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே பிஎஸ்சி டிஐபி (டிஎஸ்எஸ்) எம்ஏ (டிஎஸ்எஸ்) அவர்கள் நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை வெள்ளிக் கிழமை (21) மேற்கொள்ளவுள்ளார்.

இவ் விஜயத்தில் சாம்பிய நாட்டு இராணுவத் தளபதி உட்பட சாம்பிய, இந்தியாவின் புது டெல்லி ஆகிய நாட்டு உயர் ஸ்தாணிகராலயங்களின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் சிமுசந்து, பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஜெனரல் நா அன்ட்வே, கொள்கை கோட்பாடு மற்றும் மூலோபாய பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் கேர்ணல் லியோநாட் பீடர் டாகா, சாம்பிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கேர்ணல் ஜேதுரு சிபிலி, பதவிநிலைக் கல்லுரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கேர்ணல் டி பண்டா, விசேட படையணி பாடசாலையின் தளபதி லெப்டினன் கேர்ணல் எம் சப்வயா மற்றும் எயிட் டு கேம்பின் கெப்டன் எம் முல்லேங்க உள்ளிட்ட குழுவினர்கள் அடங்குவர்.

சாப்பியன் இராணுவத் தளபதியவர்கள் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, கௌரவ பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் ,இராணுவத் தளபதி ,கடற் படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதுடன், ஶ்ரீ ஜயவர்தனபுரையில் உள்ள உயிர்நீத்த படையினரின் ஞாபகார்த துபிக்கான விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார் என எதிர்பார்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, இலங்கை இராணுவ அக்கடமி ,கடற்படை அக்கடமி மற்றும் பல பிரதேசங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தலைமையகத்தில் சாம்பியன் இராணுவத் தளபதியவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இத் தளபதிக்கான சம்பிரதாயமான வரவேற்பு மரியாதை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. Mysneakers | Releases Nike Shoes