Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2020 19:24:00 Hours

‘CISM Day Run’ தினத்தின் நடைபவனி நிகழ்வானது கொழும்பில்

பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடற்படை, விமானப் படைத் தளபதிகள் மற்றும் 250 முப்படையினர்களை உள்ளடக்கி 'சிஐஎஸ்எம் தின ஓட்டம்' (CISM Day Run) நடைபவனியானது இன்று (18) ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றன.

இந்த ஆண்டு நிகழ்வானது சர்வதேச இராணுவ விளையாட்டு சம்மேளனத்தின் வழிக்காட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையினரது பூரன ஏற்பாட்டில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், படையினர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

'சிஐஎஸ்எம் தின ஓட்ட' நிகழ்வானது விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் இராணுவத்தின் ஒருங்கினைப்பை சமூகங்களுக்கு இடையில் மேற்கொண்டு செல்லும் நோக்கத்துடன், 2006 ஆம் ஆண்டு இந்த 'சிஐஎஸ்எம் தின ஓட்டம்' (CISM Day Run) ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது இலங்கையின் முப்படைச் சேவைகள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றன, ஏனெனில் இந்த சிறப்பு நாள் ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் CISM குறிக்கோளுடன், ‘விளையாட்டு மூலம் நட்பு’ என்ற குறிக்கோளுடன் இடம்பெறுகின்றது. அந்த வகையில் இலங்கை கடற்படையினால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு விஷேட தேவையுடைய படை வீரர்களும் சக்கர நாற்காலிகளில் இந்த நடைபவனிகளில் ஈடுபட்டனர். இந்த நடைபவனியாளது கொழும்பு வெளிச்சவீடு வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காலிமுகத்திடல் சுற்றுவளைவினூடாக மீண்டும் அந்த இடத்தை வந்தடைந்தது.

1948 ஆம் ஆண்டில், பிரெஞ்சு படைத் தலைவர் ஆயுதப்படைகளுக்கு இடையில் ஹென்றி டெப்ரஸ், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஆகிய போராளிகளுடன் சேர்ந்து, பிரான்சின் நைஸில் 'கன்சீல் இன்டர்நேஷனல் டு ஸ்போர்ட் மிலிட்டேர்' (சிஐஎஸ்எம்) ஐ நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!