Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2020 22:12:39 Hours

புதிதாக மீள் நிர்மானிக்கப்பட்ட ‘கோரல் கோவ்’ சுற்றுலா விடுதி திறந்து வைப்பு

சமீபத்தில் மீள் நிர்மானிக்கப்பட்ட 'கோரல் கோவ்' சுற்றுலா விடுதியானது, வாழைச்சேனை நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள காயங்கேனி கடலோரப் பகுதியில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா விடுதியானது இராணுவ வீரர்களுக்கும், பொது மக்களின் நலன்புரி நிமித்தம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் கிழக்கு கடற்கரையான இந்த பகுதியில் குறைந்த மக்கள் தொகைகளையும் அமைதியான அழகான காட்சிகளை கொண்ட இடமாகவும், தெளிவான நீர், அழகிய பவளப்பாறைகள் மற்றும் பலவிதமான வண்ணங்களைக் கொண்ட இயற்கை காட்சிகளும் குளிப்பதற்கு ஆழமில்லாத பாதுகாப்பான இடமாக விளங்குகின்றது. அத்துடன் தரமான சேவையையும் அதிநவீன மற்றும் செழிப்பான வசதிகளையும் இந்த சுற்றுலா விடுதியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அவை மட்டுமின்றி சுற்றுலாளிகளுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னருவை பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை இதிலிருந்து எளிதாக பார்க்க கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது மேற்பார்வையின் கீழ் இந்த சுற்றுலா விடுதி பராமரிக்கப்படுகின்றன.

‘கோரல் கோவ்’ சுற்றுலா விடுதி நிர்வாகத்தை கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் மின்னஞ்சல்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தொலைபேசி இல: 027-3272627/ 076-5303732/027-3281937. மின்னஞ்சல்: coralcovekarankerni@gmail.com Nike Sneakers | Nike Shoes