Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2020 18:54:42 Hours

இராணுவ தளபதி தொண்டர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கொஸ்கமையில் அமைந்துள்ள இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றார். இச்சந்தர்ப்பத்தில் இவருடன் லொஜஷ்டிக் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் தொண்டர் படையணியின் பிரதி கட்டளை தளபதி அவர்கள் இணைந்து கொண்டனர். பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பின்னர் இராணுவ தளபதி தொண்டர் படையணி தலைமையகத்திலுள்ள கேட்போர் கூடத்திற்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகளுடன் தொண்டர் படைத் தலைமையக வளாகத்திற்குள் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அத்துடன் இராணுவ தளபதியவர்கள் தொண்டர் படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள லொஜஸ்டிக் தலைமையத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டு வளாகத்தினுள் மரநடுகையையும் மேற்கொண்டார்.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் இங்கிருக்கும் சந்தர்ப்பத்தில் தொண்டர் படையணியின் பணியாளர்கள், புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பிற பிரிவுகளுக்கான புதிய தங்குமிட கட்டிடங்கள் மற்றும் இராணுவத்தின் முன்மொழியப்பட்ட இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் நிலையம், தொழில்துறை பூங்காவை அமைப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்தார்.

இராணுவத் தளபதி அவர்கள் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார், மேலும் அந்தத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இறுதியில் தலைமையகத்திலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டுச் சென்றார்.

இராணுவ தொண்டர் படையணி தலைமையகம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுத கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் சேதத்திற்கு உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas shoes | nike air max 95 obsidian university blue book list