Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2020 13:57:52 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் பொறிமுறை காலாட் படைத் தளபதிக்கு கௌரவ மரியாதைகள்

இராணுவ பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களுக்கு தம்புள்ளை தம்புளுஹல்மில்லேவில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் 7 – 8 ஆம் திகதிகளின் அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் தலைமையக வளாகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புத்தபெருமானின் உருவச்சிலை வளாகத்தினுள் சென்று பௌத்த மதவழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

பின்னர் தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி மலர் அஞ்சலிகளையும் செலுத்தினார்.

அத்துடன் பொறிமுறை காலாட் படைத் தலைமைய வளாகத்தினுள் சேவா வனிதா பிரிவின் ஒத்துழைப்புடன் புதிய கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டன. பின் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

அன்றிரவு தலைமையக அதிகாரி விடுதியில் அதிகாரிகளின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட் இரவு விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் இணைந்து கொண்டார். பொறிமுறை காலாட் படையணியின் மூத்த இராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து விளங்கினார்.

இந்த இரவு விருந்தோம்பல் நிகழ்வில் பிரிகேடியர் எல்.எஸ் பாலசந்திர, பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்ஷன, பிரிகேடியர் எச்.எம்.எஸ் ஹேரத், கேர்ணல் கே.கே.எஸ் பெரகும் போன்றோர் இணைந்து கொண்டனர். affiliate link trace | Nike Running