Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2020 19:15:11 Hours

காதலர் தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி மிஹிந்து செத் மெதுருவிற்கு விஜயம்

காதலர் தினத்தை முன்னிட்டு இம் மாதம் (14) ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுருவில்’ தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் அவயங்களை இழந்த 50 இராணுவ வீரர்களுடன் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும், சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் இணைந்து கொண்டு இவர்களுடன் விநோதமாக தங்களது காலங்களை களித்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருடன் இராணுவ தளபதி இணைந்து விநோதமாக பொழுதை போக்கினார்.

அத்திடியவிற்கு வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியாரை மிஹிந்து செத்மெதுரு மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சிரான் அபேசேகர அவர்கள் வரவேற்று இந்த நிலைய வாட்டுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படையினர்களின் சுகசெய்திகளை கேட்டறிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு அந்த நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இராணுவ தளபதி இணைந்து படையினர்களை இன்பமூட்டும் வகையில் அவர்களுக்கு முன்பாக பாடல்களையும் பாடினார். அத்துடன் படையினர்களுக்கு மலர் சென்டுகளும் வழங்கி வைக்கப்பட்டு இராணுவ இன்னிசை குழுவினர்களினால் வழங்கப்பட்ட இன்னிசை நிகழ்வின் போது சக்கர நாற்காலியில் இருந்த வண்ணம் படையினர்கள் ஆடிப் பாடி இன்பமுற்றனர்.

இந்த நிகழ்வுகளின் இறுதியில் , இராணுவத் தளபதி இந்த நிகழ்வில் இணைந்து படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அத்துடன் இவர்களுடன் இராணுவ தளபதியவர்கள் அன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலிலும் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படையினர்களது குடும்ப அங்கத்தவர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Jordan Release Dates , Iicf