Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2020 14:47:46 Hours

'DEFEXPO-2020' கண்காட்சியில் கலந்துகொண்ட இலங்கை பிரதி நிதி குழுவினர்

இந்தியாவிற்கான விஜயத்தினை மேற் கொண்ட இலங்கை தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் லக்னோ பாதுகாப்பு ஆராச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் இடம் பெற்ற 'DEFEXPO-2020' ஆம் ஆண்டிற்கான கண் காட்சியில் கலந்துகொண்டு அங்கு முன்வைக்கப்பட்ட காட்சிகளை பார்வையிட்டனர்.

அவர்கள் இந்த கண்காட்சியில் பல தொழில்நுட்ப வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ரோபோக்கள், வாகனங்கள், துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர், மேலும் அந்த பிரிவுகளில் கண் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் தொகுப்பு மற்றும் அவற்றின் உற்பத்திகளையும் பார்வையிட்டனர்.

இந்த கண் காட்சியானது அன்மையில் இந்தியா அரசினால் பாதுகாப்பு துறை மீதான முதலீட்டை மற்றும் பாதுகாப்பு துறையில் மற்றும் இணைப்பு பங்காளராவதற்கான ஒரு அடி தளமாக காணப்படுகின்றது. அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தினர் இந்த 'DEFEXPO-2020' கண் காட்சிக்கு பிரதான தலைமை வகித்துள்ளனர்.

இலங்கை பிரதி நிதி குழுவினர்களின் பார்வையில் இந்த கண் காட்சியில் துணைக்கருவிகள், சுதேச டிஜிட்டல் வரைபட ஜெனரேட்டர், எஞ்சின் மற்றும் விமான காட்சி அலகு, கேஸ் டர்பைன் மின் ஜெனரேட்டர், எர் தயாரிப்பாளர் இயந்திரம், கண்ணாடி காக்பிட்கள், தானியங்கி இலக்கு அங்கீகாரம் ,டிஜிட்டல் மணல், விரைவான முன்மாதிரி தொழில்நுட்பம் போன்றவை இலங்கை பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிட தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Off-White