Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2020 13:39:50 Hours

ரஷ்ய இராணுவ தளபதி இலங்கை படைக்கல சிறப்பணிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதியான ஜெனரல் ஒலோக் சல்யுகோவ் அவர்கள் இறுதி கட்டமாக இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்திற்கு புதன்கிழமை (5) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார். இப் படையணிக்கு வருகை தந்த இவருக்கு கொழும்பு 15 இல் அமைந்துள்ள இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்தின் படையினரால் நுலைவாயில் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவ தளபதி அவர்களை இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்தின் படைத் தளபதியும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்களால் வரவேற்கப்பட்டு இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்தின் படைத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அழைத்து செல்லப்பட்ட இவருக்கு இலங்கை படைக்கல சிறப்பணி தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹே அவர்களால் வரவேற்பு உரையும், படைத் தலைமையகத்தின் தற்போதய பணிகள் மற்றும் படையினர்களின் பங்கு தொடர்பாக மேலும் விரிவுரை வழங்கப்பட்டனர்.

இறுதியில், மேஜர் ஜெனரல் லியானகே மற்றும் வருகை தந்த ரஷ்ய இராணுவ தளபதி அவர்கள் அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்மிட்டதை தொடர்ந்து நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளங்களாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையகத்தில் வைத்து குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.

ரஷ்ய இராணுவ தளபதியான ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் அவர்கள் பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்ட்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் நல்லெண்ண அடிப்படையில் 5 நாள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. Nike Sneakers Store | Nike Dunk - Collection - Sb-roscoff