Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2020 13:37:50 Hours

ரஷ்ய இராணுவ தளபதி பாதுகாப்பு சேவை கட்டளை பதவிநிலை கல்லூரிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதியான ஜெனரல் ஒலோக் சல்யுகோப் அவர்கள் சபுகஸ்கந்தையிலுள்ள இராணுவ அதிகாரிகளுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை பதவிநிலை கல்லூரிக்கு இன்று (5) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த ரஷ்ய இராணுவ தளபதியவர்களை பாதுகாப்பு சேவை கட்டளை பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் வரவேற்று பின்னர் அதிகாரி விடுதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றன.

இச்சந்திப்பின் போது ரஷ்ய இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு சேவை கட்டளை பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதியினால் இந்த அதிகாரி பயிற்சி கல்லூரியின் பயிற்சி விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பல தலைமுறைகளாக இருந்த நட்பு உறவுகளை நினைவு கூர்ந்து எதிர்காலத்திலும் இவைகள் நிலைத்து நிற்க கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் கையொப்பமிட்டார்.

இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் ஐந்து நாள் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . Running Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf