Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2020 08:50:18 Hours

இலங்கையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் இறையான்மையை வலுப்படுத்தல், பிராந்திய ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்திய இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 4 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி அயோமா ராஜபக்ஷ, மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க, சபாநாயகர், உயர் நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், அட்மிரால் ஒப் பிலிட், இலங்கை விமானப் படை மார்ஷல் ,மேல் மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், மான்புமிகு பிரதமரின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியான இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், அமைச்சுக்களின் செயலாளர்கள், கொழும்பு மாவட்ட செயலாளர், மேலதிக செயலாளர்கள், தூதுவர்கள், அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் அவர்களும் இந்த சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரான திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்களின் வருகையின் போது இவர்களை மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரான மான்புமிகு ஜனக்க பண்டார ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியான இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் அதிமேதகு ஜனாதிபதியவர்கள் தேசிய கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாகாணத்திலுள்ள 100 பாடசாலை மாணவிகளால் ஜயமங்கள கீதம் மற்றும் தேவோ வஸ்சது கெலன எமது பாரம்பரிய பாடல்கள் பாடப்பட்டன. அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் உயிர்களை நீத்த படை வீர்ர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி இந்த நிகழ்வில் செலுத்தப்பட்டது.

இலங்கை பீரங்கி படையணியினால் 21 பீரங்கி வேட்டுகளையடுத்து முப்படையினரின் அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் முப்படைகளின் பிரதானியான அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதியவர்கள் இலங்கை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்த உரையின் போது எமது நாட்டின் மீட்புக்கான எங்கள் பாதையில் உள்ள அனைத்து சவால்களுக்கும் முகமளிப்பதற்காக ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் இந்த சுதந்திரத்தினை பெற்றுக் கொள்வதற்காக தியாகம் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.

இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் அணிவகுப்பு கட்டளை தளபதியும், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் முப்படை அதிகாரிகள், படை வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைப் படை வீரர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

மேலும் இந்த சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் எமது நாட்டிலுள்ள கலாச்சர கலைஞர்களின் மேல் மாகாண நடனங்களுடன் சிறந்த கண்காட்சிகள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து மத குருமார்களும், கூடுதலான பார்வையாளர்களது பங்களிப்புடன் இந்த சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ( தேசத்திற்கான ஜனாதிபதியின் உரையை முகவரி 1 இல் காணலாம்) Best jordan Sneakers | Men’s shoes