Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2020 17:38:36 Hours

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்து வைப்பு

கெபிடல் மஹாரா நிறுவனத்தின் அனுசரணையுடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்க்கப்பட்ட குடும்பத்திற்காக ‘கனவு வீடு’ எனும் தொணிப் பொருளில் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடானது, செவ்வாய் கிழமை 28 ஆம் திகதி நீர்கொழும்பு, அக்கர 50, கந்தசுரின்துகமவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் மல்கொம் ரஞ்ஜித் அவர்கள் கலந்து கொண்டார். 2019 ஏபரல் 21 ஆம் திகதி எதிர்பாராத விதமாக கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஜனிச விதுசான் எனும் இளைஞன் தனது உயிரை இழந்தார். அவர் தனது உயிரை இழப்பதற்கு முன்னர் தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டினை நிர்மாணிக்க எண்ணியிருந்தார்.

கெபிடல் மஹாரா நிறுவனம் சிரச ஊடகத்துடன் ஊடாக இந்த கனவு வீட்டினை இறந்த இளைஞனின் ஞாபகமாக குறித்த குடும்பத்திற்கு நிர்மாணித்து கொடுப்பதற்கு முன்வந்தது. மற்றும் இவ் நிர்மாணத்திற்கான ஒத்தழைப்பானது இராணுவத்தினால் வழங்கப்பட்டது.

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறித்த மனிதாபிமானமான திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி பொறியியலாளர் சேவை படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சேவை படையணிகளின் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதன் பிரகாரம் படையினர் 40 நாட்களுக்குள் குறித்த புதிய வீட்டினை நிர்மாணித்து முடித்தனர்.

இந்த நிகழ்வில் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு பதிலாக 141 படைப் பிரிவின் படைத் தளபதி உட்பட நன்கொடையாளர்களும் கலந்துகொண்டதோடு குண்டு தாக்குதலில் பலியானவரின் பெற்றோர்களுக்கு புதிய வீட்டுக்கான திறப்பும் கையளிக்கப்பட்டது.

இந்த நிர்மாண பணிகள் இராணுவ படையினரால் கடந்த 2019 டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2020 ஜனவரி 27 ஆம் திகதி நிறைவுசெய்ததுடன் (28) ஆம் திகதி செவ்வாய்கிழமை உரியவருக்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதிநிதி அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், குண்டு தாக்குதலில் பலியானவரின் உறவினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.Sports brands | adidas Yeezy Boost 350