Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2020 18:03:13 Hours

இராணுவ பதவி நிலை பிரதாணி ரணவிரு செவனவிற்கு விஜயம்

ராகமையில் அமைந்துள்ள ரணவிரு செவனவிற்கு இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்கள் புதன் கிழமை 29 ஆம் திகதி தனது விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ளவர்களின் நலன்களை பற்றி விசாரித்தார். இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் அங்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார்.

அங்கு விஜயத்தினை மேற்கொண்ட சிரேஷ்ட அதிகாரியை, ராகமை ரணவிரு செவனவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஐ.எம்.டி.எச் சேனாரத்ன மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபல்யு.பி.எஸ்.எம்.அபேசேகர ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் 118 விசேட தேவையுடைய படை வீரர்களின் களங்களுக்கு (வாட்) அழைத்துச் செல்லப்பட்டார். பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்கள் அங்குள்ள படை வீரர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கியதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது சிலர் தங்களின் யுத்த கால அனுபவங்களை சிரேஷ்ட அதிகாரியவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

தனது விஜயத்தின் இறுதியில் மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்கள் ரணவிரு செவனவில் உள்ள சிரேஷ்ட நிருவாகிகளிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் தனது வருகையின் நிமித்தம் அதிதிகள் புத்தகத்தில் தனது கையெழுத்தினையிட்டார்.

காலாட் படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக்க, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் தளபதி சந்தன குமார ஹெந்துன்முல்ல, புனர்வாழ்வு பணிப்பாளர், கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.best Running shoes brand | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals