Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2020 20:42:22 Hours

வன்னி படையினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிக்கு கையளிப்பு

எலயபதுவ பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நிர்மானிக்கப்பட்ட 15 ஆவது புதிய வீடு இம் மாதம் (20) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவிலுள்ள நன்கொடையாளியான திரு ரொபின்ஷன் மற்றும் திருமதி ஹாயில் ரொபின்ஷன் அவர்களது நிதி அனுசரனையுடன் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன தலைமையில் தொண்டர் படையணிகளான 7 ஆவது படைக்கலச் சிறப்பணி மற்றும் 5 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படையினர்களினால் இந்த வீட்டு நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வீட்டு திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

எலயபதுவ பிரதேசத்தில் வசிக்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான திரு K.B அசங்க பிரதீப் பண்டார அவர்கள் இருக்க வீடின்றி வாழ்ந்து வந்த இடையில் இவரது அவல நிலையை அவதானித்த வன்னி படையினர்கள் இவர் தொடர்பாக அவுஸ்திரேலியாவிலுள்ள நன்கொடையாளிகளின் அவதானத்திற்கு கொண்டு வந்து இந்த வீடு நிர்மானிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் ஏழாவது படைக்கலச் சிறப்பணி மற்றும் 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் திறமையான கட்டுமான பணிகளுடன் விராந்தை, சாப்பாட்டறை, படுக்கையறை மற்றும் சமையலறையை உள்ளடக்கிய 15 ஆவது புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது பயனாளிக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் நன்கொடையாளர்களின் நிதி அனுசரனையுடன் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, தொண்டர் படையணிகளான 7 ஆவது படைக்கலச் சிறப்பணி, 5 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி அதிகாரிகள், படை வீரர்கள், பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Jordan Release Dates , Iicf