Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2020 10:21:08 Hours

இராணுவத்தினரது ஏற்பாட்டில் முஸ்லீம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டின் கீழ் 543 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் மங்கள மாயாதுன்ன அவர்களது பூரன ஏற்பாட்டில் மன்னாரிலுள்ள பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர்கள் 110 பேருக்கு கற்றல் உபகரணங்கள் இம் மாதம் (6) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது மன்னார் பாத்திமா மத்திய கல்லூரியில் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான திரு பிரஷாத் லொகுபிடிய மற்றும் அவரது நன்பரான திரு ரங்கநாத் கிரிந்தகே அவர்களது முழுமையான நிதி அனுசரனையுடன் இந்த கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களது பரிந்துரைப்பின் கீழ் 543 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் 543 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் மங்கள மாயாதுன்ன, நன்கொடையாளிகளான திரு பிரஷாத் லொகுபிடிய, திரு ரங்கநாத் கிரிந்தகே , 541 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் பிரதீப் குலதுங்க, 542 ஆவது ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரவீ ஹேரத் , மன்னார் கல்வி வலய பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | Nike