Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2020 09:21:08 Hours

காலஞ் சென்ற மதிப்புக்குரிய திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு சந்தியில் அமைந்துள்ள திம்புலாகல மலையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தினுள் காலஞ் சென்ற மதிப்புக்குரிய ஶ்ரீ சீல லங்கார திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியா வருகை தந்து இந்த நினைவுச் சிலையை திறந்து வைத்தார். காலஞ் சென்ற தேரர் 1995 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி எல்டிடிஈ பயங்கரவாதிகளினால் சிங்களம், தமிழ், முஸ்லீம் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்த விவசாய பன்னைக்கு செல்லும் போது கொலை செய்யப்பட்டார்.

சிறப்பான முறையில் நிர்மானிக்கப்பட்ட காலஞ் சென்ற தேரரின் நினைவுச் சிலையானது இவரது 25 ஆவது மரண ஆண்டு நினைவு தினமானது இவ்வருடம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அனுஷ்டிக்க படவிருப்பதன் நிமித்தம் திறந்து வைக்கப்பட்டது. காலஞ் சென்ற தேரர் எல்டிடிஈ பயங்கரவாதிகளினால் காடுகளில் ஒழிந்திருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நினைவுச் சிலையானது இம் மாதம் (8) ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இராணுவ தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு பண்டுக அபேவர்தன மகாவலி வீட்டு வலய திட்ட முகாமையாளர் திரு துஷார தந்தநாராயணா, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது திம்புலாகல வடக்கின் சசனராக்ஷக பாலமண்டலாயாவின் செயலாளர் மதிப்புக்குரிய அதங்கடவால ஜனதளங்கார நாயக்க தேரர் அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தி பின்னர் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான இராணுவ தளபதியை இந்த மறைந்த தேரரின் நினைவுச் சிலை மற்றும் திறப்பு பலகையை திறந்து வைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்து நினைவுச் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் அன்றைய நிகழ்வில் இரண்டாம் கட்டமாக மனம்பிட்டியில் அமைந்துள்ள ‘பிரதிபா’ மண்டபத்தில் பெருமபாலான மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் மங்கள விளக்குகள் ஏற்றி மறைந்த தேரருக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி வாழ்த்துப் பாடல்கள் இசைத்து சொற்பொழிவுகள் ஆற்றி, பாராட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு இவரது வாழ்க்கை வரலாறு வீடியோ ஆவண கண்காட்சிகள் வெளியிடப்பட்டன இச்சந்தர்ப்பத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் துளிகள் வெளியாகியது.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தின் சார்பாக பெரும்பாலான புனித சதர்ம கீர்த்தி ஸ்ரீ சித்தார்த்த தலகல சுமனரதான நாயக்க தேரோ, பனதுரா தொட்டமுணசஹித ராய்கம் சல்பிட்டி தேகோரலேய் தலைவர் ஆதிகாரண சங்க நாயகே தேரர் ஆகியோர் நினைவு விருந்தினர் உரையை நிகழ்த்தினர்.

அடுத்ததாக மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் அன்றைய பிரதம விருந்தினருக்கு நினைவு பரிசு இந்த நிகழ்வினூடாக வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. பின்னர் இராணுவ தளபதியின் சேவையை பாராட்டி இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னமொன்று நாயக்க தேரர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

இந்த நினைவுச் சிலையை நிர்மானித்த சிப்பியான மகுல்தாமன வித்தியாலயத்தின் ஆசிரியரான திரு ஹிஹான் செனெவிரத்ன அவர்களுக்கு இந்த நிகழ்வினூடாக நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் சில்வா தனது சுருக்கமான உரையின் போது நிகழ்வை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்து மறைந்த தேரர் சமகாலத்தில் ஒரு சிறந்த சமூக குணப்படுத்துபவரின் வாழ்க்கை நினைவகத்தை நினைவுபடுத்துகிறது. திம்புலகலாவிலும் அதைச் சுற்றியுள்ள ஏழை விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முன்னோடி முயற்சிகள் மற்றும் அவரது அயராத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளின் பலன்கள் தெளிவாகக் காணப்படுவதுடன் இந்த சிலை தேரரது வழிகாட்டியின் பெயருக்கு அஞ்சலி செலுத்துவதுடன்ம். அவரது அச்சமற்ற நிலைப்பாடு, அவர் வெறுமனே திம்புலகல பாறையின் தலைமை துறவி மட்டுமல்ல, ஏழை விவசாயிகளின் வறுமையில் வாடும் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கான சிலுவைப்போர் என்பதையும் நிரூபித்துள்ளது என்று வலியுறுத்தினார்.

"மறைந்த நாயக தேரர் ஒரு ஒதுங்கிய வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து பழமையான மக்களது மனங்களில் இடம் பிடித்துள்ளார். எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் நிமித்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார். விவசாயம், சமூக நலன்புரி, பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக சிறந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றினர்.. இந்த திறமை வாய்ந்த ஒரு பெரிய துறவியின் சிலையை திறக்க முடிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன், பெருமிதம் கொள்கிறேன், இதற்காக கிழக்கு, பாதுகாப்பு படைகள் தளபதி என்னை அழைத்திருந்தார் என்று இராணுவ தளபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பங்கேற்றிய அனைத்து மதகுருமார்களுக்கும் தானம் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092