Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

இராணுவத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள்

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுள்ள நிலையில் கிழக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரால் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7 ஆவது பொறியியலாளர் படையணியின் படையினரால் (21) ஆம் திகதி காலை மன்னம் பிட்டிய தொடக்கம் கல்லேல வரையிலான பாதையில் வெள்ளத்தால் கொழும்பு- மட்டக்களப்பு தனியார் பேருந்தில் சிக்கிய நிலையில் 54 க்கும் அதிகமான பொது மக்களை மீட்டன. மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன், வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து இராணுவ படையினரால் அகழ்இயந்திரத்தை பயன்படுத்தி பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

இதேபோல், அதே பகுதிகளில் 7 ஆவது பொறியியலாளர் படையணியினரால் படகு பயன்படுத்தி நான்கு குப்பை லொரிகளில் சிக்கிய 10 பேரை மீட்டன. அத்துடன் கதுருவெல நகரம் மற்றும் மட்டக்களப்பு சந்தியை இணைக்கும் வகையில், பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கல்லேல தொடக்கம் மன்னம்பிட்டிய வரை படகு சேவையை படையினர் நிறுத்தியுள்ளன. இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.என். பெர்னாண்டோ அவர்களின் வழிக்காட்டலின் பேரில் இரண்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து 232 ஆவது படைப் பிரிவினர் பன்கூனவெலி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 35 நபர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தினால் தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டனர், படையினரால் படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி அவர்களை விரைவாக மீட்டனர்.

மேலும், அருவு சித்தாண்டி பகுதியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 65 பெண்கள், 48 ஆண்கள் மற்றும் 86 குழந்தைகள் தங்கள் வீடுகளில் சிக்கியபோது இராணுவத்தால் மீட்கப்பட்டனர். மேலும் 23 ஆவது படைப்பிரிவிற்கு கீழ் இயங்கும் 231 ஆவது படைப்பிரிவின் 10 ஆவது கஜபா படைப்பிரிவின் படையினர்களாலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதேபோல், 232 ஆவது படைப்பிரிவில் அமைந்துள்ள 12 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் கொரலபத்து தெற்கு, 209 எஸ். கீரவேலி கிராமசேவையாளர் பிரிவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் கீரவேலியில் இருந்து புலிபுஞ்சிக்கல் சாலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இராணுவம் பீஸ்ஸாவை வழங்கியது. மேலும் லவானி-அரு நீர்பெருக்கெடுத்துள்ள நிலையில் இலுப்பிட்டி சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனால் இராணுவத்தினரால் போக்குவரத்து தேவைகளை வழங்கியுள்ளன.

513 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1398 உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு லகுகல பிரதேச செயலகத்தில் உள்ள கந்தஹிந்தகம விகாரை மற்றும் ஹுலன்னுவ வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

மகாஒய பிரதேச செயலகம், நீர்ப்பாசன தினைக்களம் மற்றும் பொதுமக்கள் இணைந்து 24 ஆவது பிரிவின் கீழ் இயங்கும் 16 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் மகாசியம்பலாகண்டியா வாவியில் மணல் மூட்டைகளை நிரப்பி பெரிய அளவிலான வெள்ளத்தை தடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து வாவிகளும் நீர் மட்டத்தை எட்டியுள்ளன. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கலா வெவ மற்றும் ராஜங்கன வாவி 21 ஸ்லாட் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெள்ள மேலாண்மை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது ஒரு பேரழிவை தடுக்கும் நிமித்தம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி அவர்கள் 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கலாவெவ பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினரை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு உதவுவது தொடர்பாக கலந்துரையாடினார்.