10th December 2019 15:25:40 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ சேவை புரியும் படையினர்களுக்கு ‘மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் மற்றும் வாங்கிய நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி’ தொடர்பான எயிட்ஸ் செயலமர்வு இம் மாதம் (9) ஆம் திகதி நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த செயலமர்வானது 700 இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த செயலமர்வில் விரிவுரைகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணரான டொக்டர் திருமதி சதுரிகா விக்ரமரத்ன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Men’s shoes