Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2019 20:13:10 Hours

பாதுகாப்பு செயலாளர் புதிய கட்டிட நிர்மான பணிகளை பார்வையிடுகை

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு நேற்று (9) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் அதற்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு அமைச்சு, கடற்படை மற்றும் விமானப்படை தலைமையக கட்டிட நிர்மான பணிகளை இராணுவ தளபதியுடன் சென்று பார்வையிட்டார்.

பாதுகாப்புசெயலாளர் முதல் தடவையாக பாதுகாப்பு பதவிநிலை பிரதானி காரியாலயம், பாதுகாப்பு அமைச்சு, கடற்படை மற்றும் விமான தலைமையக புதிய கட்டிட தொகுதிகளை சென்று பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

பின்னர் கட்டிட நிர்மான பணிகளில் ஈடுபட்டிருந்த முப்படையைச் சேர்ந்த படையினருடனும் பாதுகாப்பு செயலாளர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Running Sneakers Store | Nike Running