Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd November 2019 12:10:08 Hours

இலங்கை இராணுவ மகளிர்ப் படையணித் தளபதியவர்களின் பிரியாவிடை நிகழ்வு

இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் தளபதியாக காணப்பட்ட மேஜர் ஜெனரல் எம் முத்தநாயக்க அவர்களின் பிரியாவிடையை முன்னிட்டு அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது திங்கட் கிழமை (28) பனாகொடை இலங்கை இராணுவ பீரங்கிப் படைபத் தலைமயகத்தில் இடம் பெற்றது.

இதன் போதான இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டதோடு அனைத்து படையினர்களுடனான தேநீர் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து படையினரால் இரவு விருந்துபசார நிகழ்வும் இதன் போது இடம் பெற்றது. இதன் போது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் பிரதி தளபதியான கேர்ணல் டபிள்யூ எஸ் ஏ திஸாநாயக்க அவர்களால் விடைபெற்றுச் செல்லும் இப் படையணித் தளபதியான எம் முதநாயகக் அவர்களை பாராட்டும் நோக்கில் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் சேவா வணிதா பிரிவினரால் விசேட நினைவுச் சின்னமானது திருமதி பிரியாமலி முதநாயக்க அம்மனியவர்களுக்கு இப் பிரிவிற்கு அவர்களால் வழங்கிய சேவையை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது. Sports brands | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival