Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2019 18:58:48 Hours

கிழக்கு தளபதி 241, 242 ஆவது தலைமையகங்களுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்கள் 241 மற்றும் 242 ஆவது படைத் தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (29) ஆம் திகதி மேற்கொண்டார்.

அக்கரைபத்துவில் அமைந்துள்ள 241 ஆவது படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கிழக்கு தளபதியை இந்த படைத் தலைமையகத்தின் தளபதி கேர்ணல் ஜானக விமலரத்ன அவர்கள் வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

பின்னர் கிழக்கு தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மாமரநடுகை மேற்கொண்டு படைத் தளபதிகளுக்கு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக விளக்கங்களை வழங்கி வைத்தார்.

அம்பாறையிலுள்ள 242 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு தளபதியை அப்படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சந்திக பீரிஸ் அவர்கள் வரவேற்று படையினர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.

அத்துடன் கிழக்கு தளபதியவர்கள் 23 ஆவது சிங்கப் படையணி தலைமையகத்திற்கும், 3 (தொ) விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டார். Nike footwear | NIKE AIR HUARACHE