Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2019 12:51:45 Hours

இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ கெமுனு ஹேவா படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா அவர்கள் தமது கடமைப் பொறுப்பை குருவிடவில் உள்ள கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் 26ஆம் திகதி சனிக் கிழமை ஏற்றார். மேலும் இவர் இராணுவ பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளராக காணப்பட்டதுடன் கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் 15ஆவது தளபதியாக கடமைப் பொறுப்பேற்றார்.

மேலும் இவர் இப் படைத் தலைமயகத்தின் முன்னைய தளபதியாக காணப்படும் மற்றும் தற்போது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியாக உள்ள் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் பதவிநிலைக்கு அமர்த்தப்பட்டார்.

இதன் போது வருகை தந்த கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா அவர்கள் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கெமுனு ஹேவா படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா மற்றும் இப் படைத் தலைமயகத்தின் உப தளபதியவர்கள் போன்றோர் இராணுவ அணிவகுப்பு முறைக்கமைய வரவேற்கப்பட்டனர்.

சில நிமிடங்களின் பின்னர் இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்களால் மரக் கன்றும் இப் படைத் தலைமையகத்தில் நடப்பட்டது.

அதன் பின்னர் பௌத்த மத வழிபாடுகளான பிரித் வழிபாடுகள் போன்றவற்றை மேற்கொண்டதன் பின்னர் புதிய தளபதியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா அவர்கள் படையினருக்கான உரையை நிகழ்த்தினார்.

மேலும் மேஜர் ஜெனரல் டீ எஸ் பங்சஜயா அவர்கள் புனித பெனடிக் கல்லூரி கொட்டாஞ்சேனையில் கல்வி கற்றவராவர். மேலும் இவர் இலங்கை இராணுவத்தில் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி எஸ்எஸ்சி 7 இணைந்துள்ளார். இவர் தமது இராணுவத் பயிற்சிகளை தியத்தலாவை இராணுவ பயிற்றுவிப்பு அக்கடமியில் கற்றதுடன் தமது இராணுவப் பயிற்சிகளை 1986ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நிறைவு செய்து கெமுனு ஹேவா படையணியில் இணைக்கப்பட்டார்.

திருமதி கசாமரீர் பங்சகயா அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியாக காணப்படுகின்றார். இந் நிகழ்வில் ரணவிரு அப்பரலின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ என் எம் மனதுங்க உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordans | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify