Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2019 21:42:33 Hours

வன்னி பாதுகாப்பு படையினரால் மதுரம் மரங்கள் நடும் நிகழ்வு

இராணுவத்தினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘துருலியவெநுவென் அபி’ மற்றும் ‘வன ரொப’ திட்டங்களின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் முயற்சியின் கீழ், வன்னி பாதுகாப்பு படையினரால் 100 மதுரம் மரங்கள் நடும் நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை 24ஆம் திகதி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும், இலங்கை இராணுவமானது நாட்டிலுள்ள அனைத்து படைத் தலைமையகங்களிலும் மர நடுகை திட்டத்தை 21-31ஆம் திகதி வரை ஏற்பாடுசெய்ய திட்டமிட்டது. அதற்கமைய வன்னி பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் மதுரம் மரங்கள் நடும் நிகழ்வானது வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாக பதவிநிலை அதிகாரி பிரகேடியர் ஹரென்ர ரணசிங்க மற்றும் தங்குமிட பராமரிப்பு அதிகாரி கேணல் ஜயநாத் ரண்டெனிய ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மேலும் அவர்கள் நிகழ்சியினை ஆரம்பிக்குமுகமாக முதல் இரண்டு மரங்களை நாட்டினர். அதனைத் தெரடந்து வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் அனைத்து படையினரும் மரங்களை நாட்டினர்.

பிரதேசத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நடப்பட்ட குறித்த மரங்கள் குறிப்பிட்ட வளர்சியை அடையும் வரை நன்றாக பராமரிக்கப்படும். Asics footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp