Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2019 20:19:07 Hours

கடற்படையினரின் உரையாடல் நிகழ்வு

இலங்கை கடற்படையின் வருடாந்த, 'காலி உரையாடல்', தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கடல்சார் மாநாடு - 2019 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி காலை காலிதுறைமுக ஹோட்டலில், இடம்பெற்றன. இதன் போது ஒரு கடற்படைத் துறையில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிபுணர்களின் பங்களிப்பு, நாடுகடந்த கடல்சார அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான மனநிலையை எப்படி உருவாக்கி கொள்ளுதல் என்பவற்றுகான உரையாடல்கள் இடம்பெற்றன.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வருடாந்த நிகழ்வில் பெருங்கடல் மற்றும் கடல் வழித்தலங்களின் பாதுகாப்பில் நிலவும் பல்வேறு வழிமுறைகளை பரிமாறிக் கொள்ளும் நிமித்தம் பிராந்திய மற்றும் உலகளாவிய கடற்படை நிபுணர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்கள் உரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன, , கடற்படையின் அட்மிரல் வசந்த கரணகொட, மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் திரு உதய செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) சாந்த கொட்டேகொட, வெளியுறவு செயலாளர் திரு.ரவிந்த ஆரியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அட்மிரால் ரவிந்ர விஜயகுணவர்தன, முப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை சிந்தனைக்கான நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கலநதுரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களை வெளிநாட்டு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டன.

இந்த நிகழ்வு பாரம்பரிய சம்பிரதாய எண்ணெய் விளக்கு ஏற்றுவதுடன் ஆரம்பிக்கப்பட்டன. Running sports | New Releases Nike