Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2019 15:22:42 Hours

ஸ்கோஷ் போட்டிகளில் இராணுவ மகளிர் மற்றும் மின்சார பொறியியல் படையணி தேர்வு

இராணுவ படையணிகளுக்கான 2019 ஆம் ஆண்டு ஸ்கோஷ் சம்பியன் போட்டியில் இறுதி தேர்வு போட்டியானது பனாகொட உடற்பயிற்சி மத்திய நிலையத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ ஸ்கோஷ் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் என். பி குணவர்தன அவர்கள் வரவேற்றார்.

ஸ்கோஷ் ஆண்களுக்கான போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரனாக மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த ரவீந்திர லக்சிறி நம்பர் – 1 தேர்விலும், மகளிர் படையணிகளுக்கான போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக சாமி வக்கில் போன்ற இருவரும் தேசிய மட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆண்களுக்கான போட்டிகளில் மின்சார பொறியியல் படையணி சம்பியனாகவும், இரண்டாவது இடத்தை கஜபா படையணி பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான போட்டிகளில் இராணுவ மகளிர் படையணி சம்பியனாகவும் இராணுவ பொலிஸ் மகளிர் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த போட்டிகளில் இரண்டாவது இடங்களை பெற்ற அணிகளில் சிறந்த ஆண்களுக்கான வீரனாக பாதுன் இசடீனும், பெண்களுக்கான சிறந்த வீராங்கனையாக கசுனி குணவர்தன அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த போட்டிகளில் பங்கேற்றி திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகளுக்கு இராணுவ தளபதி அவர்கள் வெற்றி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக, இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாரச்சி, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். best shoes | Air Jordan