Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2019 14:28:38 Hours

இராணுவ பிரதி பதவிநிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழத்துக்கள்.

இலங்கை இராணுவத்தில் 35 வருடங்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ பிரதி பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் பிரதி பதவிநிலை பிரதானியை இராணுவத்தில் ஆற்றிய சேவைகளை கௌரவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று இருவரும் இராணுவ எகடமியில் ஒன்றாக பயிற்சிகளை மேற்கொண்ட தோழர்களான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியில் இராணுவ தளபதியவர்கள் பிரதி பதவிநிலை பிரதானி ஆற்றிய அளப்பெரிய சேவைகளை பாராட்டி இவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார்.

மேஜர் ஜெனரல் குமுது பெரேரா இலங்கை இராணுவத்தில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இணைந்து அதிகாரி இல 19 இன் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டார். இவர் இராணுவத்தில் உயர் பதவிகளான வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ எகடமியின் கட்டளை தளபதி, பொறியியல் காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் சிங்கப் படையணியின் படைத் தளபதியாக கடமை வகித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் சிங்கப் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சிரோமி மாஷகோரால அவர்களுக்கு இராணுவ சேவா வனிதா பிரிவினால் இம் மாதம் 22 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட கௌரவளிப்பு நிகழ்வில் தலைவி திருமதி சுஜீவ நெல்ஷன் அவர்கள் பங்கேற்றிக் கொண்டு இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார். latest Running Sneakers | Air Max