Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2019 10:16:15 Hours

கிளிநொச்சியில் படையினர் மற்றும் மக்களின் புன்னகையையும் கண்ணீரையும் தருகின்ற வகையில் இடம் பெற்ற ‘கந்துல’ நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைமயகத்தினரால் ஒழுங்கமைப்பில் சகோதரர் சால்ஸ் தோமஸின் 'தஹாம் பஹான' வின் பிரபலமான' கந்துல 'இசை நிகழ்வானது 2019 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு மத பிரமுகர்கள், முப் படையினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவி பொறுப்பேற்பின் பின்னர் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்ட போது இந்த நிகழ்விற்கு முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் மூலம் மனித மதிப்புகள், நெறிமுறைகள், நல்லொழுக்கங்கள் மற்றும் அனைத்து இன சமூகங்களையும் ஒன்றிணைத்தல் அனைத்து மக்களும் அன்புடனும், நம்பிக்கையுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதன் நிமித்தம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் முதலாவது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைதி மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய பொழுதுபோக்கு நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்தார். அதேபோல் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இராணுவ தளபதி சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணியில் இதேபோன்ற ஒரு நிகழ்வை நடத்தினார், அதன்போது இராணுவத் தளபதி அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதாணியாக பணியாற்றினார்.

இந்த நிகழ்வின் மூலம் சகோதரத்துவம்இ ஆன்மீக முன்னேற்றம் மற்றும் மனித மதிப்புகளின் வலுவான உணர்வைக் பெற்றுக் கொண்ட சால்ஸ் தோமஸ் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களின் மனதில் (கண்ணீர்) “கந்துல” நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் மனதில் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதற்கமைய ஒரு மனிதபிமான சமூதாயத்தை உருவாக்க இசை விளக்கங்களைப் பயன்படுத்தி மிகவும் பிரபலமான இசைக்குழு பாடகர்களின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அந்த வசனங்களின் உண்மையான அர்த்தத்தை விளக்கி, மனிதர்களின் முன்னேற்றத்திற்காக குறிப்பிட்ட பாடல்களை வழங்கி ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர் மக்களின் மனதில் பதிய வைத்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

திட்டத்தின் முடிவில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சகோதரர் சால்ஸ் தோமஸ் அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். latest Running | Autres