Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2019 16:47:11 Hours

கஜபா படையணியின் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் கஜபா படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் கஜபா படையணியின் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வானது இம் மாதம் 13 ஆம் திகதி மாலை இடம்பெற்றன.

கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவானது இம் மாதம் (14) ஆம் திகதி இடம்பெறுவதை முன்னிட்டு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இராணுவ தளபதியின் தலைமையில் இந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வில் முதல் அங்கமாக தேசிய ,இராணுவ மற்றும் கஜபா படையணியின் கீதங்கள் இசைக்கப்பட்டு நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி நிகழ்வுகள் ஆரம்பமானது.

முதலில் இராணுவ தளபதி அவர்கள் கஜபா படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக நினைவு தூபிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி மரியாதையை செலுத்தினார். அதனை தொடர்ந்து உயிர் நீத்த இராணுவ வீரர்களின் தாய், மகள் மற்றும் உறவினர்கள் நினைவு தூபிக்கு அருகாமையில் வந்து மலரஞ்சலிகளை செலுத்தினார்.

மேலும் கஜபா படையணியின் உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் உறவினர்கள் பெரும்பாலானோர் வருகை தந்து நினைவு தூபிக்கு மலரஞ்சலிகளை செலுத்தினார். கஜபா படையணியில் 171 அதிகாரிகளும், 4079 படை வீர ர்களும் 2009 ஆண்டு வரை இடம்பெற்ற யுத்தத்தின் போது நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்துள்ளனர்.

மேலும் இராணுவ தளபதி அவர்களின் தலைமையில் ஶ்ரீ மஹா போதி வளாகத்தினுள் உயிர் நீத்த படை வீரர்களின் ஆத்மா சாந்தியடைவதற்கான ஆசிர்வாத பூஜைகள் மஹா சங்க தேரரின் தலைமையில் இடம்பெற்றன. jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online