Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2019 17:42:59 Hours

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி ‘ரணவிரு செவனவிற்கு’ விஜயம்

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ராகமையிலுள்ள ‘ரணவிரு செவனவிற்கு’ விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு சென்ற இராணுவ தளபதி அவர்களை ரணவிரு செவன நிலையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வஜீர காரியவஷம் அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் இராணுவ தளபதியவர்களுக்கு இராணுவ மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இந்த நிலையத்தில் மருத்துவம் பெற்றுக் கொண்டிருக்கும் அவயங்களை இழந்த 93 விஷேட தேவையுடைய படை வீரர்களை சென்று தளபதியவர்கள் பார்வையிட்டு அவர்களது தேவைகள் மற்றும் சுகசெய்திகளை கேட்டறிந்தார்.

மேலும் இராணுவ தளபதி அவர்களினால் இங்குள்ள படை வீர ர்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் ரணவிரு செவன நிர்வாகத்தினருடன் இராணுவ தளபதி அவர்கள் இந்த படையினர்களது மேலதிக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதி அவர்கள் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.Asics footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!