Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2019 11:00:05 Hours

வாழ்வாதார திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள்

நெரியகுளம் செல்வடோரியன் சிறுவர் இல்லத்திலுள்ள பிள்ளைகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் (5) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

செல்வந்தரான திரு சுதேஷ் எரங்க அவர்களின் நிதி உதவியுடன் இந்த பாடசாலை உபகரணங்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இவர் இந்த சிறுவர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு சுவையான பகல் உணவையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுகள் 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் K.A.N ரசிக குமார அவர்களது பூரன ஏற்பாட்டுடன் இடம்பெற்றன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் எகெதுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள தேவகிரி ராகம விகாரையில் இப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு உலருணவு பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பொருட்களை கடுகன்னாவையிலுள்ள திரு K. A பிரியந்த தயானந்த அவர்களது குடும்பத்தாரினது நிதி அனுசரனையுடன் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் 63 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டுடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

நிகழ்வில் 621 ஆவது படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், படை வீரர்கள், சம்பத்நுவர வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், கொடையாளர்கள் மற்றும் சிவிலியன்கள் இணைந்திருந்தனர். trace affiliate link | Nike Air Max