Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2019 07:44:31 Hours

கிரிவெஹர மற்றும் கதிர்காமத்தில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின நிகழ்வுகள்

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ நினைவு தின ஆசிர்வாத நிகழ்வுகள கிரிவெஹர மற்றும் கதிர்காம ஆலயங்களில் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இராணுவ கொடிகளான தொண்டர் படையணி, பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள், பயிற்சி நிலையங்கள் மற்றும் படையணிகளின் கொடிகளுக்கு ஆசிர்வாத பூஜைகள் இராணுவ தளபதியின் தலைமையில் கதிர்காம ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கிரிவெஹரையில் கப்புரு , கிலன்பச மற்றும் முருதன் சிறப்பு பூஜைகள் விளக்குகள் மற்றும் தேங்கா சூடங்கள் ஏற்றி இடம்பெற்றன.

கிரிவெஹர விகாராதிபதியான மதிப்புக்குரிய கொபாவக தமிந்த தேரர் அவர்களது தலைமையில் இராணுவத்திற்கு ஆசிர்வாதம் உண்டாகும் வகையில் இந்த சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. அத்துடன் கதிர்காமம் மஹாசேன தேவாலயத்திலும் இந்த ஆசிர்வாத மத வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதியவர்கள் கதிர்காமத்தின் பஸ்நாயக நிலமையை சந்தித்து கதிர்காம ஆலயத்தின் முன்னேற்றத்திற்காக நிதிகளை அன்பளிப்பு செய்து அவருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

முன்னதாக, புத்தரின் 'உதேசிகா' நினைவுச்சின்னங்கள் மீது இராணுவம் கொண்டுள்ள ஆழ்ந்த கௌரவத்தை குறிக்கும் முகமாக இந்த நினைவு தின பூஜைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.. கிமு 3 ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கைக்கு தனது 3 வது பயணத்தின் போது இங்கு இடைநிறுத்தப்பட்ட பின்னர் பிரபல மன்னர் மகாசென் எழுதிய வரலாறும் இந்த புன்னிய ஸ்தலங்களுக்கு உள்ளது.

இந்த நிகழ்வில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, தொண்டர் படைத் தளபதி நிர்மல் தர்மரத்ன, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக , 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த ரத்னாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் கலந்து கொண்டனர்.Sportswear free shipping | Nike Running