Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2019 11:51:20 Hours

இராணுவ படையணிகளுக்கிடையில் இடம்பெற்ற அணிவகுப்பு மற்றும் பேன்ட் போட்டிகள்

இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் சிறந்த அணிவகுப்பு மற்றும் பேன்ட் அணியினரை தேர்ந்தெடுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் பானாகொடையிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக மைதானத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்களது அழைப்பையேற்று பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த அணிவகுப்பு மற்றும் பேன்ட் அணியினர் மைதானத்தின் மத்தியில் அணிவகுப்புகளை வழங்கி பார்வையாளர்களின் கண்ணைக் கவர்ந்தனர்.

அணிவகுப்புக்களில் பங்கேற்றி திறமைகளை வெளிக்காட்டிய படையணி தலைவர்கள் மற்றும் அணியினர்களுக்கு இராணுவ தளபதி அவர்களினால் வெற்றி கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான அணிவகுப்பு போட்டிகளில் சிறந்த படையணியாக முதலாவது இடத்தை இலங்கை இலேசாயுத காலாட் படையணியும், இரண்டாவது இடத்தை படைக் கலச் சிறப்பணியும், மூன்றாவது இடத்தை கெமுனு காலாட் படையணியும் பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கான போட்டிகளில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முதலாவது இடத்தையும் இரண்டாவது , மூன்றாவது இடத்தை இராணுவ மகளிர் படையணி பெற்றுக் கொண்டது.

பேன்ட் அணிகளுக்கான போட்டிகளில் கஜபா படையணி முதலாவது இடத்தையும், இரண்டாவது இடத்தை இலங்கை பீரங்கிப் படையணியும், மூன்றாவது இடத்தை இராணுவ பொது சேவைப் படையணியும் பெற்றுக் கொண்டது.

இந்த நிகழ்வில் பதவிநிலை பிரதானி, பிரதி பதவிநிலை பிரதானி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அழைப்பினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Nike SB