Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2019 22:30:23 Hours

குச்சவெளியில் இடம்பெற்ற இறுதி போலியான கூட்டு நடவடிக்கை கண்காட்சி

நீர் காகம் கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 2019 ஆண்டின் இறுதியான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் திருகோணமலையிலுள்ள குச்சவெளி பிரதேசத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த கூட்டுப் பயிற்சியில் இராணுவ விஷேட படையணி, கொமாண்டோ படையணி, கடற்படை , விமானப் படையினர், பொறிமுறை காலாட் படையணியினரது பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வானது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ,அரச உயரதிகாரிகள், முப்படை தளபதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.

இக்கட்டான சூழ்நிலை நடவடிக்கை தாக்குதல்களுக்கு முகமளிப்பளிப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கி 10 நாடுகளைச் சேர்ந்த 80 வெளிநாட்டு அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த கூட்டுப் பயிற்சியில் இராணுவ காலாட் படையணிகளைச் சேர்ந்த 2400 பேரும், கடற்படையினர் 400 பேரும், விமானப்படையினர் 200 பேரும் பங்கேற்றுக் கொண்டனர். இந்த பயிற்சியானது செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகி திருகோணமலை, கண்டி, விக்டோரியா அனைக்கட்டு, புல்மோட்டை, நிஜபனித்தன்குளம், நிலாவெ ளி, இப்பன்கடுவ குளம், கொழும்பு, சிகீரியா, கோமரங்கடவல, வடுமுனை, பீ.எம்.ஐ.சி.எச் (BMICH) மன்னார், பலப்பிடிய, மதுரன்கேனிகுளம், காயங்கேர்ம், இலுப்பைகடவை, நரக்கமுல்ல, நுவரேலியாவில் இடம்பெற்று இறுதி நடவடிக்கை பயிற்சியானது குச்சவெளியில் இடம்பெற்றது.

இந்த பயிற்சியில் மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரசியா, பங்களாதேசம், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனிசியா, நைஜீரியா மற்றும் சம்பியா நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர்.

இந்த நடவடிக்கை கண்காட்சிகளை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு தலைமை அதிகாரி அட்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்தனர்.

விமானப்படையின் எம்ஐ 24 மிஹ்ஹெலிகொப்டர்கள், மற்றும் கடற்படையின் விஷேட தாக்குதல் படகுகளை பயண்படுத்தி கொமாண்டோ, விஷேட படையணியின் பயிற்சி நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சியானது படையினரது செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த பயிற்சிகளுக்கு சர்வதேச ரீதியில் ஒத்துழைப்பு கிடைக்கப்படுகிறது.

இராணுவத் திறனைப் பகிர்வது, உயரடுக்கினரை கூட்டு இயல்பில் 'இடை-இயக்கம்' பயன்படுத்துதல், சிக்கலான சூழல்களை அனுபவித்தல் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட காட்சிகளின் கீழ் கட்டளைகளின் சங்கிலியைப் பயன்படுத்துதல், பொதுவான புரிதலின் வளர்ச்சி, வெவ்வேறு ஆயுதங்களுக்கிடையில் திறமையான ஒருங்கிணைப்பு, இராணுவ தத்துவார்த்த புரிதல் மற்றும் ஒரு கண்ணாக செயல்படுதல் சிறப்பு நடவடிக்கைகளுக்கான திறப்பு தளம், சிறப்பு நடவடிக்கைகளில் போரின் அடிப்படைகளை பயன்படுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்தல் போன்ற விடயங்கள் இந்த பயிற்சியினூடாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கூட்டுப்படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் உரையாற்றும் பொழுது இப்பயிற்சியாளது எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் தயாராக இருக்க கூடிய செயல்பாட்டை கொண்டுள்ள பயிற்சியாயுள்ளதென விளக்கமளித்தார்.

பின்னர் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட செய்தியானது கூட்டுப்படைப் பயிற்சி கேர்ணல் பொது பதவிநிலை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் லக்மால் பெரேரா அவர்களினால் இந்த நிகழ்வில் உரையாற்றப்பட்டன.

இந்த கூட்டுப் பயிற்சியில் ’குறிப்பிட்ட செயல்பாட்டு பிரிவுகளில் புதிய அம்சங்களைச் சேர்க்கும் மிக நவீன நுட்பங்களுக்கு ஏற்ப மிகவும் விரிவானது. ஒரு கற்பனையான சூழ்நிலையின் அடிப்படையில், உடற்பயிற்சிகள் வலை ஜிஐஎஸ் மென்பொருளை, மேம்பட்ட டிஜிட்டல் பறவை அட்டவணைகள் மற்றும் ஸ்மார்ட் போர்டுகள், தனி கூட்டு கடற்படை செயல்பாடுகள், கூட்டு இரவு நடவடிக்கைகள், சிறப்புப் படைகள் மற்றும் கமாண்டோக்கள் இருவரும் ஒரே பகுதியில் நடத்திய செயல்பாடுகள் மற்றும் ஒரு பரிசூட் உபயோகிப்பு போன்றவைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இராணுவப் பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜயா அவர்களது தலைமையில் கூட்டுப்படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது ஒருங்கிணைப்புடன் இந்த நீர் காகம் கூட்டுப்படை பயிற்சிகள் ஆரம்பமாகி சிறப்பாக நிறைவுற்றது.

மேலும் கூட்டுநடவடிக்கை பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவா செனரத் யாபா, கமாண்டோ படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கே.ஏ சமரசிறி, கேர்ணல் ஜே.பி.சி பீரிஸ் அவர்களது பூரன கண்காணிப்பின் கீழ் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. Asics shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger