Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2019 15:48:29 Hours

இராணுவத்தினரது உதவியுடன் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம்

கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா ‘சத்ய சாய்’ சர்வதேச அமைப்பிற்கு 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் விடுத்த வேண்டுகோளிற்கமைய சமனகுளம் கிராம சேவக பிரிவிற்குரிய பனின்தாமம் கிராமத்தில் வறட்சியில் வாடும் 400 குடும்பத்தினருக்கு பயணளிக்கும் முகமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இம் மாதம் (13) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையமானது 1.7 மில்லியன் ரூபாய் செலவில் ஶ்ரீ லங்கா ‘சத்ய சாய்’ சர்வதேச அமைப்பின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் எண்ணக் கருவிற்கமைய 64, 642 ஆவது படைப் பிரிவின் வழிக்காட்டலின் கீழ் 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் இந்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவிற்கு 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W. D. C. K கொஷ்தா, ஶ்ரீ லங்கா ‘சத்ய சாய்’ சர்வதேச அமைப்பின் தலைவர் திரு வி மனோகரன் அவர்கள் அதிதிகளாக வருகை தந்து திறந்து வைத்தனர்.

இந்த பணியானது இராணுவம் மற்றும் சிவில் சமூகத்திற்கு இடையில் நல்லிணத்தை மேம்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. affiliate link trace | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf